வெயில்காலத்தில் மாம்பழம் ஏன் சாப்பிடணும் தெரியுமா?
why should mango eat in summer
வெயில்காலத்தில் மாம்பழம் ஏன் சாப்பிடணும் தெரியுமா?
ஒவ்வொரு வருடமும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் காலம் என்றால் அது கோடைகாலம்.
வெயில்காலத்தை மாம்பழ சீஸன் என்றும் அழைக்கிறோம். முக்கனிகளில் ஒன்றான மாம்பழத்தின் சுவையை விரும்பாதவர் வெகு சிலரே... இந்தப் பழத்தில் அளவற்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.
உங்களுக்கு மாம்பழம் ரொம்ப பிடிக்குமா? கோடையில் சாப்பிட யோசிக்கிறீர்களா? அப்படியானால் இப்பதிவு உங்களுக்குத்தான்... படியுங்கள்...!!
மாம்பழத்தில் உள்ள சத்துக்கள் :
மாம்பழத்தில் புரதச்சத்து, நார்ச்சத்து, வைட்டமின் சி, வைட்டமின் ஏ, வைட்டமின் பி6, வைட்டமின் கே, ஃபோலிக் ஆசிட் மற்றும் பொட்டாசியம் போன்று அதிக அளவில் சத்துக்கள் நிரம்பியுள்ளன.
வெயில்காலத்தில் மாம்பழம் ஏன் சாப்பிடணும் தெரியுமா?
வெயிலில் இருந்து பாதுகாப்பதில் மாம்பழம் முக்கியமான பங்கை வகிக்கிறது. சூரியனால் ஏற்படும் புற ஊதா ஒளி சருமத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும். இந்த பாதிப்பிலிருந்து நம்மை பாதுகாக்க மாம்பழத்தை கோடைகாலங்களில் சாப்பிடலாம்.
சூரியனில் இருந்து வரும் புற ஊதா ஒளியானது கதிர்வீச்சை உருவாக்குகிறது. அதுவே புற ஊதா கதிர்வீச்சு என்று அழைக்கப்படுகிறது. இது ஒரு வகையான மின்காந்த கதிர்வீச்சாகும்.
புற ஊதா கதிர்வீச்சின் தாக்கம் சருமத்திற்கு மிகவும் தீங்கு விளைவிக்கக்கூடியது. இதனால் சருமத்தில் சுருக்கங்கள், கருமையான புள்ளிகள் மற்றும் பிற பிரச்சனைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
சூரியனில் இருந்து வெளிவரும் புற ஊதாக் கதிர்கள் பல்வேறு வகையான சரும பாதிப்புகளை ஏற்படுத்தும். அதனால் தான் வெயிலில் செல்வதற்கு முன்பு சன் ஸ்கிரீன் போட்டுக் கொண்டு செல்ல சொல்கிறார்கள்.
அந்த வகையில், சருமத்தை புற ஊதாக் கதிர்களின் தாக்குதலில் இருந்து மாம்பழம் பாதுகாக்கிறது என்றால் மாம்பழம் சாப்பிட யாருக்குத்தான் பிடிக்காது? அதிலும் இப்படி ஒரு அட்டகாசமான பலன் இதிலுள்ளது என்றால் இன்னும் அதிகம் சாப்பிட தானே தோன்றும்.
பலன்கள் :
இந்த பழத்தை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம், பல்வேறு ஆரோக்கிய கேடுகள் ஏற்படுவதையும் தடுத்திட முடியும்.
அதாவது, உடல் பருமன், நீரிழிவு நோய், இதய நோய் போன்ற பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுவதற்கான ஆபத்தை இது குறைத்திடும். அதனால் தான் என்னவோ மாம்பழத்தை பழங்களின் ராஜா என்று அழைக்கிறோம்.
எப்போது சாப்பிடலாம்?
மாம்பழத்தை காலை 11 மணியிலிருந்து மாலை 5 மணிக்குள் சாப்பிடுவதே செரிமானத்தை தூண்டும். எனவே மாம்பழ சீஸனை மிஸ் பண்ண வேண்டாம்!
English Summary
why should mango eat in summer