உப்பு சேர்த்த உணவை உட்கொண்ட ஒருவருக்கு அதிக தாகம் ஏற்படுவது ஏன்.?! - Seithipunal
Seithipunal


கையில்... வாயால் ஊதுவதன் மூலம் குளிர்வது ஏன்?

வாயை நன்றாக திறந்து புறங்கையில் ஊதிப் பாருங்கள். சுடுகிறது அல்லவா? வெளிச்சுவாச காற்றுடன் வெப்பமும் வெளிவருவதே இதற்கு காரணமாகும். 

வாயை ஒடுக்கமாகப் பிடித்து ஊதிக்கொண்டு கையை வர வர தூரமாக எடுக்கக் குளிரும். ஒடுக்கமான வாய்த் துவாரத்தின் வழியாக வரும் காற்று கூடிய அழுத்தத்துடன் வரும். இது வாய் துவாரத்துக்கு வெளியே வந்ததும் வர வர அகலமாக செல்லும். 

இவ்வாறு அகலமான பரப்புக்கு செல்ல அழுத்தம் குறையும். அதனால் வெப்பநிலை குறைந்து குளிர்கிறது. மேலும் ஊதும் பொழுதும், கையில் உள்ள வியர்வை ஆவியாவதாலும் குளிர்கிறது. வியர்வை ஆவியாக தேவைப்படும் வெப்பத்தை கையில் இருந்து பெற கை குளிர்கிறது. 

இரவு நேரங்களில் சமைத்த உணவைக் கொண்டு செல்லும் பொழுது கரித்துண்டுகளைப் போட்டுக் கொண்டு செல்வது ஏன்?

இரவில் தாவரங்கள் அதிகமாக உள்ள பகுதிகளில் சுவாசத்தின் மூலம் வெளியிடப்பட்ட கார்பன்-டை-ஆக்சைடு அதிகளவில் செறிந்து காணப்படும். பகலாக இருப்பின் ஒளித்தொகுப்பு நிகழ்வதால் அகற்றப்பட்டு சமநிலைப்படுத்தப்படும்.

கார்பன்-டை-ஆக்சைடு சமைத்த உணவை அடையாமல் இருப்பதற்காக கரித்துண்டுகள் போடப்படுகின்றன. கரித்துண்டுகள் எளிதில் கார்பன்-டை-ஆக்சைடை உறிஞ்சிவிடும்.

அளவுக்கு அதிகமாக உப்பு சேர்த்த உணவை உட்கொண்ட ஒருவருக்கு அதிக தாகம் ஏற்படும் ஏன்?

உடலினுள் எடுக்கப்பட்ட அதிக உப்பை உடல் வெளியேற்ற வேண்டும். உப்பு நீர் கரைசலாகவே வெளியேற வேண்டும். இதனால் உடல் அதிகளவு நீரை இழக்கும். உடலில் உள்ள திசுக்கள் நீரை இழக்க அதிகளவு தாகம் நமக்கு ஏற்படும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Why want water after ate salted food


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->