நீங்க போடுற ட்ரஸ்லயே பார்க்க உயரமா, ஒல்லியா தெரியனுமா? இதோ உங்களுக்கு சில டிப்ஸ் சில ட்ரிக்ஸ்!
Worry no more if you are short in height and look fat wear similar clothes and you will feel the difference
உடல்வாகு என்பது மரபணு வாழ்க்கை முறை ஆகியவற்றை பொறுத்தது. ஒவ்வொரு உடல் வாகுமே அழகானது தான். இருந்தாலும் எல்லோருக்கும் உயரமாக, ஒல்லியாக இருக்க வேண்டும் என்ற ஆசை இருப்பதை தவிர்க்க முடியாது. சில நேரங்களில் நமது ஆடை கூட நமது தோற்றத்தை முடிவு செய்யும் காரணியாக இருக்கும். அவ்வாறு உயரம் கம்மியாக மற்றும் உடல் சற்று பருமனாக இருப்பவர்கள் எந்த மாதிரியான ஆடை அணிந்தால் நேர்த்தியாக இருக்கும் என பார்ப்போம்.
வெர்ட்டிகள் ஸ்ட்ரைப்டு டிரஸ் என்று அழைக்கப்படும் செங்குத்து கோடிட்ட ஆடைகளை அணிவதன் மூலம் அது நம்மை பார்ப்பவர்களின் பார்வையில் மாயாஜாலத்தை ஏற்படுத்தும் என ஆடை நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். இது கிடை மட்டமாக இல்லாமல் கீழிருந்து மேலாக இருப்பதால் பார்ப்பதற்கு உயரமாகவும் மெலிதான தோற்றத்தையும் கொடுக்கும்.
ஒரே வண்ணமுடைய ஆடைகள் அதாவது டொனல் ட்ரெஸ்ஸிங் நமது தோற்றத்தை மாற்றிக் காட்டக்கூடிய ஒரு ஆடை அணியும் முறையாகும். இவ்வாறு ஆடை அணியும்போது நம்மை உயரமானவர்களாகவும் ஒல்லியானவர்களாகவும் காட்டுவதற்கு உதவும். மேலும் ஒரே வண்ணங்களில் ஆடை இருப்பதால் கவனச் சிதறலும் ஏற்படாது.
பேண்ட்டை உயர்த்தி போடுவது நம்மை உயரமாக காட்டுவதற்கு மற்றும் ஒரு வழியாகும். சண்டைய இடுப்பிற்கு மேல் உயர்த்தி போடுவதன் மூலம் நம் கால்கள் நீளமாக இருப்பது போன்ற ஒரு தோற்றத்தை கொடுக்கும். இது நமது உடற்பகுதியை மெல்லியதாகவும் காட்டுவதற்கு உதவும் ஒரு வழியாகும்.
ஃபிளேர்டு ஜீன்ஸ் அணிவது நம்மை உயரமானவர்களாகவும் மெல்லியதாகவும் காட்டுவதற்குரிய மற்றொரு வழி. இந்த பேண்டில் இடுப்பு பகுதி அதிகமாக இருப்பதால் இது நம்மை ஒல்லியாக காட்டும். மேலும் ஃபிளேர்ஸ் தரையில் படும்போது நமது கால்கள் தரையில் நேரடியாக படுவது போன்ற தோற்றத்தை கொடுக்கும்.
English Summary
Worry no more if you are short in height and look fat wear similar clothes and you will feel the difference