நவீன இலக்கியத்தை பொதுவாசகர்களுக்கு விரிவாக அறிமுகம் செய்த எழுத்தாளர்.! - Seithipunal
Seithipunal


நவீன தமிழ் இலக்கியத்தின் மிக முக்கிய எழுத்தாளர்...

இந்தியா முழுவதும் சுற்றியலைந்து வாழ்வு அனுபவங்கள் கொண்ட தேசாந்திரி...

தனது உரைகள், பத்திகள் மூலமாகச் சிறந்த இலக்கியங்கள், திரைப்படங்கள் ஆகியவற்றை அறிமுகப்படுத்தியும் வருபவர்...

அட்சரம் என்ற இலக்கிய இதழின் ஆசிரியராக இருந்தவர்...

இலக்கியத்தை எல்லா அர்த்தத்திலும் ஒரு வாழ்நாள் சேவையாகச் செய்து வருபவர்...

சாகித்திய அகாடமி விருது பெற்றவர்...

அவர் தான்

எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன்:

பிறப்பு, கல்வி :

எஸ்.ராமகிருஷ்ணன், 1966ஆம் ஆண்டு ஏப்ரல் 13ஆம் தேதி விருதுநகர் மாவட்டத்தின் மல்லாங்கிணர் என்ற ஊரில் சண்முகம் - மங்கையர்க்கரசி தம்பதியருக்கு பிறந்தார். விருதுநகரில் ஆங்கில இலக்கியம் முதுகலையும், ஆய்வுநிறைஞர் பட்டமும் பெற்றார். ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்ட ஆய்வு மேற்கொள்ளத் தொடங்கி நிறைவு செய்யவில்லை.

திருமண வாழ்க்கை :

இவரின் மனைவி சந்திர பிரபா, மகன்கள் ஹரிபிரசாத், ஆகாஷ். படிப்பை முடித்த பின்னர் சில ஆண்டுகள் எதிலும் நிலைகொள்ளாமல் அலைந்த பின்னர் குங்குமம் இதழில் உதவி ஆசிரியராகச் சேர்ந்தார். பின்னர் திரைப்படங்களுக்கு வசனம் எழுதத் தொடங்கினார். வசந்தபாலன் இயக்கிய ஆல்பம் முதல்படம். அதன்பின் முழுநேர எழுத்தாளராக வாழ்கிறார்.

இலக்கிய வாழ்க்கை :

1984ஆம் ஆண்டு மாணவராக இருந்தபோது எழுதிய முதல் கதை 'கபாடபுரம்". அது கையெழுத்து பிரதியாக நண்பர்களால் வாசிக்கப்பட்டு தொலைந்து போயிற்று. வெளியான முதல்கதை பழைய தண்டவாளம், கணையாழியில் வெளியானது.

1990ஆம் ஆண்டு எஸ்.ராமகிருஷ்ணனின் முதல் சிறுகதைத் தொகுதி 'வெளியிலிருந்து வந்தவன்" சென்னை புக்ஸ் வெளியீடாக வெளிவந்து.

2001ஆம் ஆண்டு முதல் ஆனந்தவிகடன் இதழில் அவர் எழுதத் தொடங்கிய துணையெழுத்து, கதாவிலாசம், தேசாந்திரி ஆகிய தொடர்கள் அவருக்கு பொதுவாசகர்களிடையே பெரும் புகழை உருவாக்கித் தந்தன. 

கதாவிலாசம் தொடர்வழியாக நவீன இலக்கியத்தை பொதுவாசகர்களுக்கு விரிவாக அறிமுகம் செய்தார். வரலாற்றை பொதுவாசகர்களுக்கு அறிமுகம் செய்யும் பொருட்டு எனது இந்தியா, மறைக்கபட்ட இந்தியா என இரண்டு வரலாற்று நூல்களை எழுதியிருக்கிறார்.

தமிழுக்கு வெளியிலும் பரவலாக கவனிக்கப்பட்ட எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன். அவருடைய படைப்புகள் இந்திய, அயல்நாட்டு மொழிகள் பலவற்றில் மொழியாக்கம் செய்யப்பட்டுப் பல இலக்கியத் தொகுப்புகளில் இடம் பெற்றிருக்கின்றன.

விருதுகள் :

தமிழக முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் சிறந்த நாவல் விருது (2001)

ஞானவாணி விருது - நெடுங்குருதி நாவல் - பழனி வாழிய உலகநல நற்பணி மன்றம் (2003)

தமிழ் வளர்ச்சித் துறை விருது - அரவான் நாடகம் (2006)

சிறந்த புனைவு இலக்கிய விருது - யாமம் நாவல் - கனடியத் தமிழ் இலக்கியத் தோட்டம் (2007)

சிகேகே இலக்கிய விருது - ஈரோடு சிகேகே அறக்கட்டளை (2008)

தாகூர் இலக்கிய விருது - யாமம் நாவல் - சாம்சங் இந்தியா நிறுவனமும் சாகித்ய அகாடமியும் இணைந்து வழங்கும் விருது (2010)

இயல் விருது - வாழ்நாள் சாதனையாளர் விருது - கனடியத் தமிழ் இலக்கியத் தோட்டம் (2011)

கோவை கண்ணதாசன் கழகம் வழங்கிய இலக்கிய விருது (2011)

சாகித்ய அகாடமி விருது - சஞ்சாரம் நாவல் (2018)


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Writer S Ramakrishnan History


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->