சப்பாத்தி, தோசைக்கு அருமையான முட்டை கறி இப்படி செய்து பாருங்கள்! சூப்பர் ரெஸிபி.!
yummy spicy egg curry receipe
இட்லி சப்பாத்தி மற்றும் தோசை ஆகியவற்றிற்கு சைடு டிஷ் அருமையான ஒரு முட்டை கறி மசாலா எப்படி செய்யலாம் என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள் :
வேக வைத்த முட்டை - 5
வெங்காயம் -3
தக்காளி - 2 பேஸ்ட் செய்தது
ஏலக்காய் -3
இலவங்கப்பட்டை -1 சிறிய துண்டு
பிரிஞ்சி இலை -1
இஞ்சி பூண்டு பேஸ்ட் -1 டேபிள்ஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டேபிள்ஸ்பூன்
மல்லித்தூள் - 2 டீ ஸ்பூன்
சீரகத்தூள் -1/4 டீ ஸ்பூன்
மஞ்சள் தூள -4 சிட்டிகை அளவு
மிளகுத்தூள் -1/2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு எண்ணெய் - 4 ஸ்பூன்
செய்முறை :
கடாயை அடுப்பில் வைத்து சிறிதளவு எண்ணெய் ஊற்றி வேக வைத்த முட்டையை லேசாக நிறம் மாறும் வரை எண்ணெயில் பிரட்டி எடுக்க வேண்டும். அடுப்பை அணைத்துவிட்டு முட்டையை தனியாக எடுத்து வைக்கவும்.
இப்போது மற்றொரு கடாயை வைத்து அதில் எண்ணெய் ஊற்றி நன்றாக எண்ணெய் சூடானதும் மூன்று ஏலக்காய் ஒரு இலவங்கப்பட்டை மற்றும் ஒரு பிரியாணி இலை சேர்த்து நன்றாக கிளறவும்.
அதற்குப்பின் பொடியாக நறுக்கி வைத்த வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும்.
வெங்காயம் பொன்னிறத்தில் வந்ததும் ஒரு டேபிள் ஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து அதன் வாசம் நீங்கும் வரை நன்றாக வதக்கவும்.
இஞ்சி பூண்டு வாசம் நீங்கியதும் அரைத்து வைத்த தக்காளி பேஸ்ட் சேர்த்து தக்காளியின் பச்சை வாசம் போகும் வரை நன்றாக வதக்கவும். தீயை மீடியம் ஃப்ளேமில் வைத்து சிறிது நேரம் கொதிக்க விடவும்.
மூன்று நிமிடம் கழித்து எண்ணெய் தனியாக பிரிந்ததும் தீயை குறைத்து வைத்து மிளகாய்த்தூள், மல்லித்தூள், சீரகத்தூள், மஞ்சள் தூள், மிளகுத்தூள் சேர்த்து நன்றாக கிளறி விடவும்.
மசாலா நன்றாக கலந்து வரும் வரை கிளறி விடவும்.. இவை அனைத்தும் நல்ல பதத்தில் வந்ததும் வேக வைத்து எண்ணெயில் பிரட்டிய முட்டையை இதனுடன் கலந்து நன்றாக கிளறி விடவும். இவற்றுடன் ஒரு கப் தண்ணீர் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து எட்டு நிமிடம் கொதிக்க விடவும். எட்டு நிமிடம் கொதித்த பின் அடுப்பை அணைத்து சூடான முட்டைக்கறியை சப்பாத்தி இட்லி மற்றும் தோசை ஆகியவற்றுக்கு பரிமாறவும்.
English Summary
yummy spicy egg curry receipe