பிரதமர் அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் - முக ஸ்டாலின்.!
11 NEW MEDICAL COLLEGE OPEN NOW
தமிழகத்தில் புதிதாக 11 மருத்துவ கல்லூரிகளை காணொளி காட்சி மூலம் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இன்று திறந்து வைத்தார்.
விருதுநகர், கள்ளக்குறிச்சி, நீலகிரி, ராமநாதபுரம், திருப்பூர், நாமக்கல், திருவள்ளூர், கிருஷ்ணகிரி, திண்டுக்கல், அரியலூர், நாகப்பட்டினம் ஆகிய 11 மாவட்டங்களில் புதிதாக அரசு மருத்துவக் கல்லூரிகளை இன்று பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் பேசியதாவது, "இன்று நாட்டிலேயே அதிக மருத்துவ கல்லூரிகள் மற்றும் அதிக மருத்துவ எம்பிபிஎஸ் இடங்களையும் கொண்ட, மருத்துவத்துறையில் நமது நாட்டிற்கே இந்த தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக விளங்கி கொண்டிருக்கிறது.
இதற்கான அனுமதியும், ஒத்துழைப்பையும், நிதி உதவியும் வழங்கி வரக்கூடிய மத்திய அரசுக்கு, குறிப்பாக இந்திய பிரதமர் அவர்களுக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றியை நான் தெரிவித்துக் கொள்கிறேன்.
அரசின் இத்தகைய முயற்சிகளுக்கு மத்திய அரசு அளித்துள்ள ஆதரவுக்கு நன்றி கூறும் அதே அதேவேளையில், புதிதாக உருவாக்கப்பட்டுள்ள மாவட்டங்களிலும் புதிய மருத்துவ கல்லூரிகளை அமைப்பதற்கு, மாநில அரசுக்கு தங்களுடைய தொடர்ந்து உதவி அளிக்க வேண்டும் என்று இந்த நேரத்தில் கேட்டுக்கொள்ள விரும்புகிறேன்.
மருத்துவ கட்டமைப்பு வசதி மட்டுமின்றி மக்களுக்கு பயன் பெறும் மருத்துவ திட்டங்களை செயல்படுத்துவதிலும் தமிழ்நாடு அரசு குறிப்பாக திராவிட முன்னேற்றக் கழக அரசு இந்த நாட்டிற்கே முன்னுதாரணமாக திகழ்ந்து கொண்டிருக்கிறது.
நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு விதிவிலக்கு அளிக்க வேண்டும் என்று தொடர்ந்து நாங்கள் வலியுறுத்தி வருகிறோம். எனவே மனித வள ஆட்களின் அடித்தளமாகக் கொண்டு உள்ள மாணவர் சேர்க்கை முறை தொடர்பான தமிழ்நாடு அரசின் கோரிக்கையை மத்திய அரசு நிறைவேற்றி தரவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்" என்று முதலவர் முக ஸ்டாலின் பேசினார்.
English Summary
11 NEW MEDICAL COLLEGE OPEN NOW