ஆழ்கடலில் சிக்கி தவித்த 12 மீனவர்கள் விரைவில் இந்தியா வருகை- எம்.பி விஜய் வசந்த்!
12 fishermen stranded in the deep sea will soon return to India MP Vijay Vasanth
கன்னியாகுமாரி மாவட்டம், ரவிபுத்தன் துறையை சேர்ந்த அருளப்பன் என்பவருக்கு சொந்தமான படகில் கடந்த 11-ம் தேதி கொச்சி துறைமுகத்திலிருந்து 12 மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.
தொடர்ந்து கடந்த 15-ம் தேதி ஆழ்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது இவர்களது விசைப்படகில் எந்திர கோளாறு ஏற்பட்டதன் காரணமாக பழுது ஏற்பட்டது. இதையடுத்து ஆழ்கடலில் இவர்கள் தத்தளித்து வருகின்றனர்.
இந்நிலையில், கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த், வெளியிட்டுள்ள சமூக வலைத்தள பக்கத்தில், குமரி மாவட்டத்தின் 4 மீனவர்கள் உட்பட 12 இந்திய மீனவர்கள் ஆழ்கடலில் மீன் பிடித்து கொண்டிருந்த போது அவர்கள் படகு பழுதடைந்து, கட்டுபாட்டை இழந்த படகு ஓமன் நாட்டு கடல் எல்லைக்கு கொண்டு செல்லப்பட்டது.
அவர்கள் கடலில் தத்தளிப்பதை அறிந்து, வெளியுறவு துறை அமைச்சர் மற்றும் ஓமன் தூதரகத்தை தொடர்ப்பு கொண்டு அவர்களை பத்திரமாக மீட்க கோரிக்கை வைத்தேன்.
அதன்படி அவர்கள் மீட்கப்பட்டு இந்திய கடற்படை மற்றும் கடலோர காவல்படை உதவியுடன் இந்தியாவிற்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். அக்டோபர் முதல் நாள் இந்த 12 மீனவர்களும் அவர்கள் விசை படகும் இந்தியா வந்தடையும் என்ற மகிழ்ச்சியான தகவலை தெரிவித்து கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
English Summary
12 fishermen stranded in the deep sea will soon return to India MP Vijay Vasanth