18 மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டு...30 நாட்கள் நடந்த சட்டசபை இன்று நிறைவு பெற்றது...!!! - Seithipunal
Seithipunal


தமிழக சட்டசபையில் பட்ஜெட் தாக்கல், கடந்த மார்ச் மாதம் 14-ந் தேதி பொது பட்ஜெட்டும், அடுத்த நாள் (15-ந் தேதி) வேளாண் பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, 17-ந் தேதி முதல் 21-ந் தேதி வரை இரு பட்ஜெட்டுகள் மீதான விவாதமும், துறை சார்ந்த இரு அமைச்சர்களின் பதில் உரையும் இடம்பெற்றது.

அடுத்ததாக, மார்ச் 24-ந் தேதி முதல் துறை வாரியாக மானியக் கோரிக்கை விவாதம் நடந்து வந்தது. இடையில் வந்த வார விடுமுறை நாட்களிலும், பண்டிகை விடுமுறை நாட்களிலும் சட்டசபை கூட்டம் நடைபெறவில்லை.இந்தக் கூட்டம் நடைபெற்ற ஒவ்வொரு நாளும், காலை 9.30 மணிக்கு முதலில் கேள்வி நேரம் எடுத்துக்கொள்ளப்பட்டது.

பிறகு கேள்வி நேரம் முடிந்ததும் துறை வாரியாக மானியக் கோரிக்கை விவாதம் தொடங்கியது. இதில் ஒவ்வொரு நாளும் 2, 3 துறைகள் மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடந்தது.அவ்வகையில், மொத்தம் 55 துறைகள் மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்றது. கடைசியாக, நேற்று காவல், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடந்தது.

இதில் முக்கியமாக, இந்த விவாதத்தில் பங்கேற்று அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான 'எடப்பாடி பழனிசாமி' பேசினார். அவரது குற்றச்சாட்டுக்கு சட்டசபையில் அனல் பறக்க உடனுக்குடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலளித்தார். இந்நிலையில், இன்று காலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பதில் உரை இடம்பெற்றது.

அதனைத் தொடர்ந்து, காவல், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை தொடர்பான புதிய அறிவிப்புகளை அவர் வெளியிட்டார்.அதன் பின்னர், இந்த சட்டசபை கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்பட்ட 18 சட்ட மசோதாக்களும் குரல் வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றப்பட்டன. அத்துடன் கடந்த ஒன்றரை மாத காலத்தில் 30 நாட்கள் நடைபெற்ற சட்டசபை கூட்டத் தொடர் நிறைவு பெற்றது.

மழைக்கால கூட்டத் தொடர்:

இதில் தேதி குறிப்பிடாமல் கூட்டத்தை ஒத்திவைப்பதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்தார். அடுத்து, அக்டோபர் மாதம் மழைக்கால கூட்டத் தொடர் நடைபெறும். இந்தக் கூட்டம் சுமார் 3 முதல் 5 நாட்கள் வரை நடைபெறும். இந்த ஆண்டுக்கான சட்டசபை கூட்டத் தொடர் அத்துடன் நிறைவடையும் எனது தகவல் வெளியாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

18 bills were tabled 30 day assembly session concluded today


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->