20 கட்சிகள் அழைப்பை ஏற்றது! முதலமைச்சர் மு.க ஸ்டாலினின் தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் ...! - Seithipunal
Seithipunal


முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,மத்திய அரசு பாராளுமன்ற தொகுதி மறுவரையறை செய்யும் போது, தென் மாநிலங்களில் தொகுதிகளின் எண்ணிக்கை குறையும் சூழல் இருப்பதாக கருத்து தெரிவித்து வருகிறார்.இதையொட்டி சென்னை தலைமைச் செயலகத்தில் நடந்த அனைத்துக் கட்சி கூட்டத்தில் வருகிற 22-ந்தேதி தென் மாநிலங்களை சேர்ந்த கூட்டு நடவடிக்கை குழு அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் அடங்கிய கூட்டத்தை சென்னையில் நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டது.

இதையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தை ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா,  ஒடிசா, கேரளா, மேற்கு வங்காளம்,பஞ்சாப் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலுள்ள கட்சிகளுக்கு தி.மு.க. எம்.பிக்கள் குழுவினர் வழங்கி அழைப்பு விடுத்து வந்துள்ளனர்.

இதில் 20-க்கும் மேற்பட்ட கட்சிகளின் முன்னணி தலைவர்கள் கலந்து கொள்ள சம்மதம் தெரிவித்துள்ளனர்.இதையொட்டி கூட்டு நடவடிக்கை குழு கூட்டத்தை சென்னை கிண்டியில் உள்ள ஐ.டி.சி. கிராண்ட் சோழா நட்சத்திர ஓட்டலில் 22-ந்தேதி நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

இதற்காக அங்கு அறைகள் முன்பதிவு செய்யப்பட்டு வருகிறது.விமான நிலையத்துக்கு அருகே இந்த ஓட்டல் உள்ளதால் வெளி மாநிலங்களில் இருந்து வருபவர்களுக்கு இது வசதியாக இருக்கும் என்று தெரிவித்துள்ளனர்.

ஒவ்வொரு மாநிலத்தில் இருந்தும் வருபவர்களை வரவேற்று ஓட்டலுக்கு அழைத்து செல்ல தி.மு.க.வில் தனியாக குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் இக்குழுவினர் 22-ந்தேதி நடைபெறும் கூட்டத்துக்கான ஏற்பாடுகளை முன்னின்று கவனித்து வருகின்றனர்.இதுத்தொடர்பான  கலவையான விமர்சனங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

20 parties accepted the invitation Chief Minister MK Stalins constituency reorganization issue


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->