2026 சட்டமன்ற தேர்தல் எதிரொலி!...இன்று திமுக தேர்தல் ஒருங்கிணைப்புக்குழு ஆலோசனை! - Seithipunal
Seithipunal


எதிர் வரும் 2026-ம் ஆண்டு சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள, திமுகவில் தேர்தல் ஒருங்கிணைப்புக் குழு ஒன்றை திமுக கட்சியின் தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அமைத்துள்ளார்.

முன்னதாக திமுக தேர்தல் ஒருங்கிணைப்புக் குழுவின் முதல் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற நிலையில், இதில் குழுவின் அடுத்தக்கட்ட பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது.  மேலும் தேர்தலில் தொகுதிகள் அடிப்படையில் பிரித்து நிர்வாகிகள் பணியாற்றும் வகையில் மாவட்ட செயலாளர்களை அழைத்து சந்தித்து, அவர்களிடம் கருத்து கேட்கவும் முடிவெடுக்கப்பட்டது

இந்த குழுவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் நேரு, எ.வ.வேலு, தங்கம் தென்னரசு,  மற்றும் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

இந்த நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தேர்தல் ஒருங்கிணைப்புக் குழு இன்று மாலை 5 மணிக்கு ஆலோசனை நடத்துகிறது.

இந்த ஆலோசனை கூட்டத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரை கொண்ட ஐவர் குழு, தகவல் தொழில் நுட்ப அணி உள்பட 3 அணிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

2026 assembly election reverberation dmk election coordination committee consultation today


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->