2026 சட்டமன்றத் தேர்தலிலும் பாஜகவுடன் தான்... டிடிவி தினகரன் ஓபன் டாக்.!  - Seithipunal
Seithipunal


வருகின்ற மக்களவைத் தேர்தலில் தேனி மற்றும் திருச்சியில் போட்டியிடும் அ.ம.மு.க வேட்பாளர்களை கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இன்று அறிவித்தார். 

அதன்படி தேனியில் டிடிவி தினகரன் மற்றும் திருச்சி தொகுதியில் செந்தில்நாதன் போட்டியிடவுள்ளனர். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன், 

தேனி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் தங்க தமிழ்ச்செல்வன் எனது முன்னாள் நண்பர். யார் வெற்றி பெறுவார்கள் என்பதை பொதுமக்கள் தான் முடிவு செய்யவேண்டும். 

யாரையும் போட்டியாளராக நான் கருதவில்லை. நான் யாருக்கும் குரு இல்லை எனக்கு  யாரும் சிஷ்யன் இல்லை. மக்கள் செல்வர் என்ற பட்டத்தை தேனி மக்கள்தான் வழங்கினர். 

மீண்டும் பிரதமராக மோடி மட்டும் தான் வர உள்ளார். வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலிலும் பா.ஜ.கவுடன் தான் கூட்டணி தொடரும் என தெரிவித்துள்ளார். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

2026 election TTV Dhinakaran speech


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->