2ஜி வழக்கில் திடீர்திருப்பம் : சிபிஐ தாக்கல் செய்த புதிய மனு,!
2g case cbi new appeal aug 22
கடந்த காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சியில், தொலைத் தொடர்பு சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாகவும், அதன்மூலம் மத்திய அரசுக்கு ரூ.1.76 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டதாகவும் சிஏஜி (மத்திய தணிக்கை துறை) சுட்டிக் காட்டியது.
இந்த குறித்த வழக்கில் திமுகவை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்ட 15 பேரை விடுதலை செய்து டெல்லி சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இந்த தீர்ப்பை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் சிபிஐ தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்ட நிலையில், தற்போது புதிதாக மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதில், "இந்த வழக்கின் விசாரணை 2018-ம் ஆண்டில் தொடங்கியது. 2020 ஜனவரி 15-ல் சிபிஐ தரப்பு வாதம் நிறைவடைந்தது. எதிர்தரப்பினரின் வாதம் 2020 பிப்ரவரி 7-ம் தேதி தொடங்கியது.
ஆனால், கொரோனா நோய்த்தொற்று உள்ளிட்ட காரணங்களால் வழக்கின் விசாரணையில் தாமதம் ஏற்பட்டிருக்கிறது.
ஆகவே, இந்த வழக்கில் தினசரி விசாரணை நடத்த வேண்டும். ஒருவேளை உயர் நீதிமன்றத்தில் தினசரி விசாரணை நடத்த முடியவில்லை எனில், சிறப்பு அமர்வை நியமித்து தினசரி விசாரணை நடத்தலாம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
2g case cbi new appeal aug 22