கள்ளக்குறிச்சி சம்பவம் எதிரொலி : சேலத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட 350 பேர் கைது..! - Seithipunal
Seithipunal


கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் கள்ளச் சாராயம் அருந்தியதில் 52 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் சேலம், விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளிலும், புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

தமிழகத்தை உலுக்கியுள்ள இந்த சம்பவத்திற்கு பல்வேறு அரசியல் கட்சியை சேர்ந்தவர்களும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் சேலம் மாவட்டத்தில் உள்ள கோட்டை மைதானம் அமைந்துள்ள பகுதியில் சேலம் மாவட்ட பாஜக சார்பில் இன்று (ஜூன் 22) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பாஜகவின் மாநில துணைத் தலைவர் கே. பி. ராமலிங்கம் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பாஜகவின் மாவட்ட தலைவர்களான சுரேஷ் பாபு, சண்முகநாதன், சுதிர் முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிலையில் பாஜகவினரின் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சேலம் மாவட்ட காவல்துறை அனுமதி வழங்க மறுத்த நிலையில், இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியுள்ளது.

இதையடுத்து தடையை மீறி சேலம் கோட்டை பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தமிழக அரசுக்கு எதிரான கோஷங்களை எழுப்பினர். கள்ளச் சாராய வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் திமுகவோடு தொடர்புடையவர்கள் தான். முதல்வர் இந்த சம்பவத்திற்கு தார்மீக பொறுப்பேற்று ராஜினாமா செய்ய வேண்டும் என்று கோஷமிட்ட பாஜகவினர் 350க்கும் மேற்பட்டோரை சேலம் போலீசார் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

350 Peoples Were Arrested in Salem For Protest Against TN Govt


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->