கேரளாவில் 4 தமிழர்கள் ரயில் மோதி உயிரிழப்பு!...மத்திய அரசு நிவாரணம் வழங்க பினராயி விஜயன் வலியுறுத்தல்!
4 tamils died in a train collision in kerala pinarayi vijayan urged the central government to provide relief
கேரளாவில் ரயில் விபத்தில் பலியான தூய்மை பணியாளர்களின் குடும்பத்தினருக்கு மத்திய அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் வலியுறுத்தியுள்ளார்.
திருவனந்தபுரம் - டெல்லி இடையே கேரளா எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படுகிறது. இந்த நிலையில், கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டத்தில் உள்ள சோரனூர் ரயில் நிலையம் அருகே, பாரதப்புழா ஆற்றின் குறுக்கே உள்ள பாலத்தில், ரயில் வரும் நேரம் அறியாமல், ஒப்பந்த அடிப்படையில் தூய்மைப் பணியினை மேற்கொண்டிருந்தபோது, டில்லி-திருவனந்தபுரம் விரைவு ரயில் மோதியது.
இந்த கோர விபத்தில் ஊழியர்கள் அனைவரும் தண்டவாளத்தில் இருந்து தூக்கி வீசப்பட்டனர். இதில் 2 பெண்கள் உள்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் உயிரிழந்த ரெயில்வே ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் அனைவரும் தமிழ்நாட்டின் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்துள்ளது.
இந்த நிலையில், ரயில் விபத்தில் பலியான தூய்மை பணியாளர்களின் குடும்பத்தினருக்கு மத்திய அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் வலியுறுத்தியுள்ளார்.
English Summary
4 tamils died in a train collision in kerala pinarayi vijayan urged the central government to provide relief