2026ம் ஆண்டுக்குள் 46, 584 அரசுப் பணியிடங்கள் நிரப்பப் படும் - சட்டசபையில் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு..! - Seithipunal
Seithipunal


தமிழக சட்டசபையில் இன்றும் கள்ளக்குறிச்சி சம்பவம் குறித்து அமளியில் ஈடுபட்ட அதிமுகவினர் வெளியேற்றப் பட்டனர். இதையடுத்து முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் 110 விதியின் கீழ் பேசினார். அப்போது அவர் பேசியதாவது, "திமுக அரசு எப்போதும் நமது அடுத்த தலைமுறையைப் பற்றி சிந்திக்கும் அரசு தான். திமுக அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற இந்த 3 ஆண்டுகளில் இதுவரை 32 ஆயிரம் பணியிடங்கள் நிரப்பப் பட்டுள்ளன. 

மேலும் 65 ஆயிரத்து 483 பேர் கடந்த 3 ஆண்டுகளில் பணி நியமனம் செய்யப் பட்டுள்ளனர். மேலும் உலக முதலீட்டாளர் மாநாடு மூலம் லட்சக் கணக்கான வேலை வாய்ப்புகள் உருவாக்கப் பட்டு, அதன் மூலம்  3 லட்சத்து 6 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது. 

மேலும் 2026ம் ஆண்டு ஜனவரி மாதத்திற்குள் 46 ஆயிரத்து 584 அரசுப் பணியிடங்கள் நிரப்பப் படும்" என்று தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய முதலமைச்சர், "கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் உயர்ந்துள்ள சமூகம் குற்றச் செயல்களில் ஈடுபடாது. 

தொடர்ந்து பெண்களுக்கான திட்டங்களை அரசு மக்களிடம் முன்னெடுத்துச் செல்லும். புதிய சட்டங்கள் கொண்டு வருவதை விட, நடைமுறையில் உள்ள சட்டங்களின் அடிப்படையிலேயே எந்த ஒரு விஷமும் அணுகப் பட வேண்டும். அதுவே சரியானதும் கூட" என்று முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் பேசியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

46584 Govt Posts Will be Filled Within 2026 January C M Stalin Says


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->