தமாக போட்டியிட்ட 3 தொகுதிகளிலும் 4வது இடம்!!
4th place in all the 3 constituencies contested
தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றுள்ள தமிழ்மாநில காங்கிரஸ் கட்சி போட்டியிட்ட மூன்று நாடாளுமன்ற தொகுதிகளின் தோல்வியை பெற்று உள்ளது.
இந்தியாவில் 18வது மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தபடி, கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி முதல் கட்ட வாக்கு பதிவு, ஏப்ரல் 26 ஆம் தேதி இரண்டாம் கட்ட வாக்கு பதிவு, மூன்றாம் கட்ட மக்களவைத் தேர்தல் மே 7ஆம் தேதியும், நான்காம் கட்டம் மக்களவைத் தேர்தல் மே 13ஆம் தேதியும், ஐந்தாம் கட்ட மக்களவைத் தேர்தல் மே 20 ஆம் தேதியும், ஆறாம் கட்டும் மக்களவைத் தேர்தல் மே 25ஆம் தேதியும், கடைசி கட்ட ஏழாம் கட்ட மக்களவை தேர்தல் ஜூன் மூன்றாம் தேதியும் நடைபெற்ற முடிந்தது.
தேசிய ஜனநாயக உடலில் இடம் பெற்ற தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு ஸ்ரீபெரும்புதூர், தூத்துக்குடி,ஈரோடு என மூன்று தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. பதினெட்டாவது மக்களவைத் தேர்தலுக்கான தேர்தலில் பதிவான வாக்குகள் எனப்பட்டு வரும் நிலையில், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி போட்டியிட்ட ஸ்ரீபெரும்புதூர், தூத்துக்குடி,ஈரோடு உள்ளிட்ட மூன்று தொகுதிகளிலும் தோல்வியை சந்தித்துள்ளது.
English Summary
4th place in all the 3 constituencies contested