5 மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகள்.. முன்னிலை நிலவரம்.!!
5 sate election results update 8 30 am
உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், மணிப்பூர், கோவா ஆகிய 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் வாக்குப் பதிவு முடிந்தது இன்று வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது.
உத்தரப்பிரதேசத்தில் 403 தொகுதிகள், பஞ்சாபில் 117 தொகுதிகள், உத்தரகண்டில் 70 தொகுதிகள், 60 தொகுதிகள், கோவாவில் 40 தொகுதிகள் என மொத்தம் 690 தொகுதிகளுக்கான தேர்தல் பல கட்டங்களாக நடைபெற்றது. அப்போது பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகிறது.
இந்நிலையில், 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை பலத்த பாதுகாப்புடன் தொடங்கியது. 8.30 மணி நிலவரப்படி, உத்தரப் பிரதேசம் கோரக்பூர் தொகுதியில் போட்டியிடும் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் முன்னிலை பெற்றுள்ளார். கார்ஹல் தொகுதியில் போட்டியிடும் சமாஜ்வாடி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் முன்னிலை பெற்றுள்ளார். பஞ்சாப் முதலமைச்சர் சரண்ஜித் சன்னி போட்டியிடும் இரு தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளார். கோவா - முதல்வர் பிரமோத் சாவந்த் முன்னிலை பெற்றுள்ளார்.
உத்தரப் பிரதேசம் : பாஜக 65, சமாஜ்வாடி 49, காங்கிரஸ் தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது.
பஞ்சாப் : காங்கிரஸ் 18, ஆம் ஆத்மி 23, பாஜக 2 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது.
உத்தரகாண்ட் : பாஜக 12, காங்கிரஸ்13 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது.
கோவா : பாஜக 16, காங்கிரஸ் 20 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது.
மணிப்பூர் : பாஜக 10, காங்கிரஸ் 1 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது.
English Summary
5 sate election results update 8 30 am