உச்சகட்ட எதிர்பார்ப்பில் காத்திருந்த அரசியல் கட்சிக்கு ஆப்பு வைத்த தேர்தல் ஆணையம்.! அதிரடி தடை உத்தரவு.!
5 STATE ELECTION TODAY IMPORTEDT ANNOUNCE
உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட், மணிப்பூர், கோவா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் சட்டமன்ற பொதுத்தேர்தல் வருகின்ற பிப்ரவரி மாதம் பத்தாம் தேதி முதல் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது.
தற்போது நோய்த்தொற்று பரவல் காரணமாக இந்த 5 மாநில சட்டமன்ற பொதுத்தேர்தலுக்கான தேர்தல் பிரச்சாரத்திற்கு, அரசியல் கட்சிகள் பொதுக்கூட்டம், சைக்கிள் பேரணி, பாதயாத்திரை உள்ளிட்டவைகள் நடத்தக்கூடாது என்று, நாளை வரை (22 ஆம் தேதி) தேர்தல் ஆணையம் தடை விதித்து உத்தரவிட்டிருந்தது.
இந்த தடை நாளையுடன் முடிவடைய உள்ளதால், அரசியல் கட்சிகள் பொதுக்கூட்டம் மற்றும் சைக்கிள் பேரணி, பாதயாத்திரை நடத்துவதற்கான அனுமதி வழங்குவது அல்லது கட்டுப்பாடுகளுடன் அனுமதி வழங்குவது குறித்த ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.
இந்த ஆலோசனை கூட்டத்தில் 5 மாநில சுகாதார செயலாளர்கள் மற்றும் தலைமை சுகாதார செயலாளர்கள் உடன், தேர்தல் ஆணையம் காணொளி மூலமாக ஆலோசனை நடந்தது.
இந்த கூட்டத்தில் முடிவில், பிரசாரம், பேரணிகளுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் ஜனவரி 31 வரை நீட்டித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், தேர்தல் பொதுக்கூட்டங்களில் 500 பேர் வரை பங்கேற்க அனுமதி வழங்கியும், வீடுவீடாக பிரசாரம் மேற்கொள்வதற்கு 10 பேருக்கு அனுமதி வழங்கியும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இன்று தடையை நீக்கி தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிடும் என்று காத்திருந்த ஐந்து மாநில அரசியல் கட்சிகளுக்கு இது பெரும் ஏமாற்றமாக அமைந்துள்ளது.
English Summary
5 STATE ELECTION TODAY IMPORTEDT ANNOUNCE