தமிழகத்தில் 5 சுங்கச்சாவடிகளை அகற்ற நடவடிக்கை - அமைச்சர் அதிரடி பேட்டி.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் பரனூர் உள்ளிட்ட 5 சுங்கச்சாவடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக, தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ வ வேலு தெரிவித்துள்ளார்.

இன்று கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் அருகே 40 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நடைபெற்றுவரும் சாலை சீரமைப்பு பணிகளை ஆய்வு செய்த அமைச்சர் எ வ வேலு பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் தெரிவிக்கையில்,

"தமிழகத்தில் 60 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் சுங்கச்சாவடிகளை கணக்கிடும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. நாடாளுமன்றத்தில் மாண்புமிகு மத்திய அமைச்சர் நிதின் கட்கரி சொல்லி இருக்கிறார்.

அவர் கூறியதற்கு இணங்க தமிழகத்தில் 60 கிலோ மீட்டருக்குள் இருக்கின்ற சுங்கச்சாவடிகளில் எடுப்பதற்கான பட்டியலை தயாரித்து, சுங்கச்சாவடிகளை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்படும்" என்று அமைச்சர் எ வ வேலு தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

60 km tollgate issue


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->