இத்தகைய செயல்களில் இனி தொண்டர்கள் ஈடுபடக்கூடாது - அன்புடன் கேட்டுக் கொண்ட அன்புமணி இராமதாஸ்!
PMK Anbumani Ramadoss Statement Valiayapatti incident
பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த தாராசுரத்தில் வன்னியர் சங்கத்தின் சார்பில் அண்மையில் நடத்தப்பட்ட சோழ மண்டல சமய, சமுதாய நல்லிணக்க மாநாடு நடந்த இடத்திற்கு அருகில் வளையப்பேட்டை என்ற இடத்தில் வி.சி.க. கொடிக்கம்பம் தொண்டர்களால் சேதப்படுத்தப்பட்டிருக்கிறது.
இதற்காக எனது வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். இனிவரும் காலங்களில் எந்தக் கட்சிக்கு எதிராகவும் இத்தகைய செயல்களில் தொண்டர்கள் ஈடுபடக்கூடாது என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்" என்று அன்புமணிஇராமதாஸ் தெரிவித்துள்ளார்.
English Summary
PMK Anbumani Ramadoss Statement Valiayapatti incident