ஈஷாவில் மஹா சிவராத்திரி விழா; 'மகா யோகா யக்னா; தீபமேற்றி உள்துறை அமைச்சர் ஆரம்பித்து வைத்தார்..!
Home Minister inaugurates Maha Yoga Yagna by lighting the lamp
கோவை, ஈஷா யோகா மையத்தில் 31வது ஆண்டு மஹா சிவராத்திரி விழா இன்று நடக்கிறது. தலைமை விருந்தினராக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்றார்.
ஒடிசா கவர்னர் ஹரிபாபு கம்பஹம்பதி, பஞ்சாப் கவர்னர் குலாப் சந்த் கட்டாரியா, கர்நாடக துணை முதல்வர் சிவகுமார், மத்திய சட்ட மற்றும் பார்லிமென்ட் விவகாரத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால், மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை இணையமைச்சர் முருகன், மஹா., நீர்ப்பாசனத் துறை அமைச்சர் சஞ்சய் ரத்தோர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இன்றைய சிவராத்திரி விழாவில், திரைபிரபலங்களான நடிகர் சந்தானம், நடிகை தமன்னா, விஜய் வர்மா, ஓம்பிரகாஷ் மெஹ்ரா உள்ளிட்ட சினிமா பிரபலங்களும், இந்திய கால்பந்து அணி முன்னாள் கேப்டன் பாய்சுங் பூட்டியா உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.
ஈஷாவில் 'ஈசனுடன் ஓர் இரவு' என்ற மஹா சிவராத்திரி நிகழ்ச்சியை, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, 'மகா யோகா யக்னா' தீபமேற்றி ஆரம்பித்து வைத்துள்ளார்.

தொடர்ந்து, சத்குரு அவரை வரவேற்றார். ஈஷா யோகா மையத்தில் உள்ள சூரிய குண்டத்தில் அமித்ஷா வழிபாடு செய்தார். சூரிய குண்டத்தில் இறங்கி, நீரைத் தெளித்து வழிபட்டார். அதன்பின், 'பேட்டரி' வாகனத்தை சத்குரு இயக்க, முன்னிருக்கையில் அமித் ஷா அமர்ந்தார்.
அதன் பின்னர், லிங்க பைரவி தேவி சன்னதியில் உள்ள திரிசூலத்தை அமித்-ஷா வழிபட்டார். தியானலிங்கத்தில் சத்குரு நிகழ்த்திய பஞ்சபூத க்ரியாவில் கலந்து கொண்டார். அதனை தொடர்ந்து அவர் 'மஹா யோகா யக்னா' தீபத்தை ஏற்றிய பிறகு, தேசிய கீதம் இசைக்கப்பட்டு நிகழ்ச்சியை ஆரம்பித்தார்.

நிகழ்வில், சவுண்ட்ஸ் ஆப் ஈஷா மாணவர்கள், பின்னணி இசைப்பாடகர் சத்யபிரகாஷ், கர்நாடக பாடகி சுபா ராகவேந்திரா, பாரடாக்ஸ் தனிஷ் சிங், மராத்தி இசை சகோதரர்கள் அஜய், அதுல், குஜராத் நாட்டுப்புறக் கலைஞர் முக்திதான் காத்வி, இந்திய ஆன்மிக பாடல்களைப் பாடி சமூக வலைத்தளங்களில் பிரபலமாக உள்ள ஜெர்மனியின் காஸன்ட்ரா மே உள்ளிட்ட இசைக்கலைஞர்களின் இசை, பார்வையாளர்களை, பரவசத்தில் ஆழ்த்தியது. தொடர்ந்தும் காலை 06 மணிவரை கலை நிகழ்ச்சிகள் நடக்கவுள்ளன.
English Summary
Home Minister inaugurates Maha Yoga Yagna by lighting the lamp