அரசு பள்ளிக்காக ரூ . 1 கோடி நிலத்தை எழுதிக் கொடுத்த தமிழ்ச்செல்வி! குவியும் பாராட்டு!
madurai Education aLanda Donation
மதுரை மாவட்டம், மேலூர் அருகே கீழையூர் கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசு உயர்நிலைப் பள்ளிக்கு கோபாலகிருஷ்ணன்-தமிழ்செல்வி தம்பதியினர் 2 ஏக்கர் நிலத்தை தானமாக வழங்கியுள்ளனர்.
தாங்கள் பிறந்த கிராமத்திற்கும், குழந்தைகளின் கல்விக்கும் நன்மை செய்ய வேண்டும் என்பதற்காக இந்த நிலத்தை தானமாக வழங்கியதாக கோபாலகிருஷ்ணன்-தமிழ்செல்வி தம்பதியினர் தெரிவித்துள்ளனர்.
இந்த தம்பதியினரின் செயலுக்கு கிராம மக்கள் மட்டும் அல்லாமல் மதுரை மாவட்ட மக்களும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
மேலும், கோபாலகிருஷ்ணன்-தமிழ்செல்வி தம்பதியினரின் இந்த செயல் மற்றவர்களுக்கும் முன்மாதிரியாக அமைந்துள்ளதாக நெகிழ்ச்சியுடன் கூறும் கல்வியாளர்கள், தங்களது சொந்த ஊரில் உள்ள பள்ளிக்கு நிலத்தை தானமாக வழங்கியதன் மூலம், அவர்கள் குழந்தைகளின் கல்விக்கு முக்கியத்துவம் அளித்துள்ளன என்றும், இந்த தம்பதியினரின் தன்னலமற்ற சேவை சமூகத்தில் மாற்றத்தை உண்டாக்கும் என்றும் தெரிவித்துள்ளனர்.
English Summary
madurai Education aLanda Donation