6ம் கட்ட வாக்குபதிவு : பெண்கள்,இளைஞர்கள் அதிகமாக வாக்களிக்க வேண்டும் - பிரதமர் மோடி!!
6th phase election women and youth vote more
ஆறாம் கட்ட மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி இளைஞர்கள் மற்றும் பெண்கள் அதிக அளவில் வாக்களிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
இந்தியாவில் மக்களவை தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அந்த வகையில் ஏப்ரல் 19ஆம் தேதி முதல் கட்ட வாக்குப்பதிவும் ஏப்ரல் 26 ஆம் தேதி இரண்டாம் கட்ட வாக்குப்பதிவும் மே 7ஆம் தேதி மூன்றாம் கட்டம் வாக்குப் பதிவும் மே 13ஆம் தேதி நான்காம் கட்ட மக்களவை தேர்தலும் மே 20 தேதி 5ம் கேப்டன் மக்களவைத் தேர்தலும் நிறைவடைந்த நிலையில், இன்று 6ம் கட்டம் மக்களவை தேர்தல் நடைபெற்று வருகிறது.
ஆறு மாநிலங்கள் இரண்டு யூனியன் பிரதேசங்களில் உள்ள 58 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு என்றும் வாக்கு பதிவு நடைபெற்று வருகிறது. குடியரசு தலைவர் திரௌபதி முர்மு வாக்களித்தார்.
இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி, ஆறாம் கட்ட மக்களவைத் தேர்தலில் அதிக ஓட்டுகளை அளிக்க வேண்டுகிறேன். ஒவ்வொரு ஓட்டும் முக்கியமானது.குறிப்பாக பெண்கள், இளைஞர்கள் அதிகமாக வாக்குகளை செலுத்த வேண்டும் என்று கூறிவுள்ளார்.
English Summary
6th phase election women and youth vote more