பிரபல யூ-டியூப் சேனல்களை முடக்கிய இந்திய தகவல் ஒளிபரப்பு அமைச்சகம்.!
8 YouTube channels ban
தேசிய பாதுகாப்பு மற்றும் பொது அமைதி ஆகியவற்றிற்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையிலான செய்திகளை வெளியிடும் யூடியூப் சேனல்கள் மற்றும் சமூக வலைதளபக்கங்கள் மீது இந்திய தகவல் ஒளிபரப்பு அமைச்சகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
இதனை தொடர்ந்து மத்திய அமைச்சகம், போலி செய்திகளை வெளியிடுவதாக வந்த புகாரின் பேரில் கண்காணிப்பில் ஈடுபட்டு வந்த நிலையில் தற்போது இந்தியாவைச் சேர்ந்த 7 சேனல்கள் மற்றும் பாகிஸ்தானை சேர்ந்த ஒரு சேனல் என மொத்தம் 8 யூடியூப் சேனல்களை மத்திய அரசு முடக்கி உள்ளது.
இந்தியாவின் தேசிய பாதுகாப்பு, வெளிநாட்டு உறவுகள் மற்றும் பொது அமைதி குறித்து தவறான தகவல்களை பரப்பியதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், ஏற்கனவே வேறு சேனல்களில் தடை செய்யப்பட்ட மத ரீதியிலான வீடியோக்கள் மற்றும் தடை செய்யப்பட்ட நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், முடக்கப்பட்ட சேனல்களில் உள்ள தேசவிரோத செய்திகள் ஆய்வு செய்யப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மத்திய அரசு அரசு தெரிவித்துள்ளது. முடக்கப்பட்ட யூ-டியூப் சேனல்களுக்கு 114 கோடி பார்வையாளர்களும், 85 லட்சத்திற்கும் மேற்பட்ட சப்ஸ்கிரைபர்களும் உள்ளதாக ஒளிபரப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.