முரசொலி செல்வம் பெயரில் விரைவில் அறக்கட்டளை உருவாக்கப்படும் - முதலமைச்சர் மு.க ஸ்டாலின்! - Seithipunal
Seithipunal


முரசொலி செல்வம் பெயரால் விரைவில் அறக்கட்டளை ஒன்று உருவாக்கப்பட்டு, ஆண்டுதோறும் முப்பெரும் விழாவில் விருது வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை, அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கில், முரசொலி நாளேட்டின் முன்னாள் ஆசிரியரும் எழுத்தாளருமான முரசொலி செல்வம் அவர்களின் திருவுருவப் படத்திறப்பு விழா நேற்று நடைபெற்றது. முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர்
கி. வீரமணி கலந்து கொண்டு முரசொலி செல்வம் திருவுருவப் படத்தினை திறந்து வைத்தார்.

தொடர்ந்து இந்த நிகழ்ச்சியில், முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், விரைவில் முரசொலி செல்வம் பெயரால் அறக்கட்டளை ஒன்று உருவாக்கப்பட்டு, திராவிட இயக்கத்தைச் சேர்ந்த படைப்புகளுக்கும் - படைப்பாளிகளுக்கும் ஆண்டுதோறும் முப்பெரும்_விழா-வில் விருது வழங்கப்படும் என்று கூறினார்.

இந்த நிகழ்வில், முதலமைச்ச்ர் மு.க ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி, தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, அமைச்சர் துரை முருகன், விசிக தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

A foundation will soon be created in the name of murasoli selvam chief minister mk stalin


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->