தமிழில் முதல் மதிப்பெண் பெறும் மாணவருக்கு பரிசு வழங்க வேண்டும்!...மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு திருமாவளவன் கடிதம்! - Seithipunal
Seithipunal


இலங்கையில் தமிழில் முதல் மதிப்பெண் பெறும் மாணவருக்குப் பரிசு வழங்கவேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் வலியுறுத்தியுள்ளார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் தொகுதி நாடாளுமனற உறுப்பினருமான தொல். திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கையில் தமிழில் முதல் மதிப்பெண் பெறும் மாணவருக்குப் பரிசு வழங்கவேண்டும் என்றும், இது தொடர்பாக வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் அவர்களிடம் கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

அதன் படி, இலங்கையில் சபரகமுவா பல்கலைக்கழகத்தில் இந்தியில் முதல் மதிப்பெண் பெறும் மாணவருக்கு தங்கப் பதக்கமும் 25 ஆயிரம் ரொக்கப் பரிசும் வழங்கப்படுகிறது. இலங்கையில் உள்ள இந்தியத் தூதரகம் அளித்த நிதியைக் கொண்டு இந்தப் பரிசு வழங்கப்படுகிறது.

இந்திக்கு அளிப்பதைப் போல தமிழில் முதல் மதிப்பெண் பெறும் மாணவருக்கும் தங்கப் பதக்கமும் ரொக்கப் பரிசும் இந்திய தூதரகத்தின் மூலம் வழங்க வேண்டும் என்று,  இந்திய வெளியுறவுத்துறை அமைச்சரிடம் விடுதலை சிறுத்தைகள் கட்சியி சார்பில் கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளேன் என்று குறிப்பிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

A prize should be awarded to the student who gets first marks in tamil thirumavalavan letter to union minister jaishankar


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->