கலைஞர் மறைவுக்குப் பின் தொடரும் திமுகவின் வெற்றிப் பயணம்!- ஒரு பார்வை..!! - Seithipunal
Seithipunal


முன்னாள் திமுக தலைவரும், முதல்வருமான திரு. மு. கருணாநிதி அவர்கள் கடந்த 2018ம் ஆண்டு மறைந்தார். அதன் பின்னர் தற்போதைய முதலமைச்சரான மு. க. ஸ்டாலின் திமுக தலைவராக பொறுப்பேற்றார். தற்போதைய மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் திமுக கூட்டணியின் வெற்றி உறுதியாகி விட்டது.

முன்னதாக கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தல் தான் மு. க. ஸ்டாலின் திமுக தலைவராக பதவியேற்ற பிறகு எதிர்கொண்ட முதல் தேர்தல். அதில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் உள்ள 40 மக்களவைத் தொகுதிகளில் 39 இடங்களில் திமுக கூட்டணி வெற்றி பெற்றது.

இது மட்டுமல்லாது 21 தொகுதிகளுக்கான சட்டசபை இடைத்தேர்தல், ஊரக உள்ளாட்சித் தேர்தல், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல், ஈரோடு மாவட்டத்தின் கிழக்குப் பகுதி சட்டசபை தேர்தல், 2021ம் ஆண்டின் தமிழக சட்டசபைத் தேர்தல் என்று ஸ்டாலின் தலைமையில் திமுக எதிர்கொண்ட அனைத்து தேர்தல்களிலுமே திமுகவிற்கு வெற்றிக்கனியை பறித்து தந்துள்ளார் மு. க. ஸ்டாலின்.

இந்நிலையில் முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் ஒரு முறை "கடந்த 2021ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் திமுகவிற்கு வாக்களிக்காதவர்கள் எல்லாம் 'இவர்களுக்கு வாக்களிக்கத் தவறி விட்டோமே' என்று கூறும் வகையில் ஆட்சி செய்வோம்" என்று கூறினார். 

அதன்படி அப்போது வாக்களிக்காத மக்கள் எல்லாம் இப்போது திமுக கூட்டணிக்கு ஒட்டுமொத்தமாக வாக்களித்து தங்களது ஏக்கத்தை தீர்த்துக் கொண்டு விட்டனர் போலும். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

A Vision Of DMKs Continuous Victory After Kalaignar Death


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->