24 மணி நேரத்துக்குள் அஜய் மக்கனை காங்கிரசில் இருந்து நீங்க வேண்டும்; ஆம் ஆத்மி வேண்டுகோள்..!
aadmi party against the congress
காங்கிரஸ் கட்சியில் இருந்து அஜய் மக்கனை நீக்க வேண்டும். அல்லது அக்கட்சியை கூட்டணியில் இருந்து கூறியுள்ளார்.
டில்லியில் நிருபர்களைச் சந்தித்த காங்கிரசின் அஜய் மக்கன், ஆம் ஆத்மி அரசின் தோல்விகள் குறித்து பட்டியல் வெளியிட்டு, கெஜ்ரிவாலை கடுமையாக விமர்சித்து பேசியிருந்தார். இது ஆம் ஆத்மி கட்சி நிர்வாகிகள் இடையே கோபத்தை கிளப்பி உள்ளது.
டில்லியில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இங்கு ஆம் ஆத்மி, பா.ஜ.க , காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தனித்தனியே போட்டியிட உள்ளன.
இதற்காக வேட்பாளர்களை அறிவித்து, பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில், ஆம் ஆத்மி எம்.பி., சஞ்சய் சிங் கூறியதாவது: டில்லியில் பா.ஜ.க.விற்கு ஆதரவாக காங்கிரஸ் உள்ளது. அக்கட்சி பலன் அடையும் வகையில் காங்.,கின் செயல்பாடுகள் உள்ளன. பா.ஜ., தயாரித்து கொடுத்த அறிக்கையை அஜய் மக்கன் படிக்கிறார் என்றும் கூறியுள்ளார். பா.ஜ.,அவர்கள் கூறியபடி பேசுகிறார். கெஜ்ரிவாலை தேச விரோதி எனக்கூறி அனைத்து எல்லைகளையும் அவர் கடந்து விட்டார். எந்த பா.ஜ., தலைவரையாவது அவர் தேச விரோதி எனக்கூறியுள்ளாரா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
தேர்தல் பிரசாரத்தின் போது, காங்கிரஸ் தலைவர்களுக்கு எதிராக அநாகரீகமான எந்த வார்த்தையையும் நாங்கள் கூறவில்லை. ஆனால், காங்கிரஸ் பட்டியலை பார்த்தால், அது பா.ஜ., தயாரித்து கொடுத்தது போல் உள்ளது.
அடுத்த 24 மணி நேரத்திற்குள் அஜய் மக்கனை காங்கிரசில் இருந்து நீக்க வேண்டும் என கோரிக்கை வைக்கிறேன். அது நடக்காத பட்சத்தில் , ' இண்டியா' கூட்டணியில் இருந்து காங்கிரசை வெளியேற்றுவோம் என நாங்கள் மற்ற கட்சிகளை வலியுறுத்துவோம். ஆம் ஆத்மி எம்.பி., சஞ்சய் சிங் கூறியுள்ளார்.
இவரை தொடர்ந்து டில்லி முதல்வர் அதிஷி இவ்வாறு கூறியதாவது; டில்லி தேர்தலுக்காக பா.ஜ., உடன் ஒப்பந்தம் போட்டது போல் காங்கிரசின் செயல்பாடுகள் உள்ளன.
கெஜ்ரிவாலை தேச விரோதி என அஜய் மக்கன் கூறுகிறார். இதே போன்ற குற்றச்சாட்டை எந்த பா.ஜ., தலைவருக்கும் எதிராகவும் காங்கிரஸ் கூறியது கிடையாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தனக்கு எதிராக காங்கிரஸ் புகார் அளிக்கிறது. எந்த பா.ஜ., தலைவருக்கு எதிராகவும் அக்கட்சி புகார் கொடுத்து உள்ளதா? எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ஆகும் செலவு பா.ஜ.,விடம் இருந்து வருகிறது என்ற நம்பகத்தகுந்த தகவல்கள் எங்களுக்கு வருகிறதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
சந்தீப் தீக்ஷித்திற்கு பா.ஜ., நிதியுதவி செய்ததாக நாங்கள் கேள்விப்படுகிறோம். நாங்கள் தேச விரோதிகள் என்றால், லோக்சபா தேர்தலில் எங்களுடன் கூட்டணி வைத்தது ஏன்? என கேட்டுள்ளார்.
தேர்தலில் ஆம் ஆத்மியை தோற்கடிக்க காங்கிரஸ் பா.ஜ., இடையே பரஸ்பர ஒப்பந்தம் போடப்பட்டு உள்ளது. இதன் மூலம் பா.ஜ., வெற்றி பெற உதவி செய்வது என அக்கட்சிகள் முடிவு செய்துள்ளன.
இரு கட்சிகளுக்கு இடையே எந்த ஒப்பந்தமும் இல்லை என்றால், அஜய் மக்கனை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என்று டில்லி முதல்வர் அதிஷி மேலும் கூறியுள்ளார்.
English Summary
aadmi party against the congress