ஆம் ஆத்மி என்பது ஒரு அரசியல் கட்சியின் பெயர் அல்ல, புரட்சியின் பெயர் - அரவிந்த் கெஜ்ரிவால்.! - Seithipunal
Seithipunal


உத்திரப் பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், மணிப்பூர், கோவா உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.

இதில், பஞ்சாப் மாநிலத்தில் உள்ள 117 தொகுதிகளில் ஆம் ஆத்மி கட்சி 23 தொகுதிகளில் வெற்றியும், 68 தொகுதிகளில் முன்னிலையும் வகித்து வருகிறது. மேலும், காங்கிரஸ் 2 தொகுதிகளிலும், பாஜக 1 தொகுதியிலும் வெற்றி பெற்றுள்ளனர்.

117 தொகுதிகளைக் கொண்ட பஞ்சாப் மாநிலத்தில் முதல் முறையாக ஆம் ஆத்மி கட்சி தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க உள்ளது.

இந்த நிலையில் இனி மருத்துவம் படிக்க எந்த மாணவரும் உக்ரைனுக்கு செல்லாத இந்தியாவை உருவாக்குவோம் எனவும் இந்த தேர்தல் முடிவுகளின் மூலம் கெஜ்ரிவால் ஒரு தீவிரவாதி அல்ல, உண்மையான ‘தேச பக்தர்’ என்பதை மக்கள் காட்டியுள்ளனர்"  என ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.

மேலும், ஆம் ஆத்மி என்பது ஒரு அரசியல் கட்சியின் பெயர் அல்ல, புரட்சியின் பெயர்  எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

AAP is not the name of a political party it is the name of a revolution Arvind Kejriwal


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->