யாரும் எதிர்பாராத விதமாக இணை அமைச்சராக பதவியேற்ற நடிகர்!  - Seithipunal
Seithipunal


பிரதமராக தொடர்ந்து மூன்றாவது முறையாக நரேந்திர மோடி இன்று பொறுப்பேற்றுக்கொண்டார். இதன்மூலம் தொடர்ந்து 3 முறை பிரதமராக இருந்த ஜவாஹர்லால் நேருவின் சாதனையை பிரதமர் மோடி சமன் செய்துள்ளார்.

பிரதமர் மோடியை தொடர்ந்து மத்திய அமைச்சர்களாக அமித் ஷா, ராஜ்நாத் சிங், நிர்மலா, நிதின் கட்கரி உள்ளிட்டவர்கள் பதவியேற்று வருகின்றனர். அனைவருக்கும் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைத்து வருகிறார்.

பாஜகவின் கூட்டணி கட்சி என்று சொல்வதை விட நட்பு கட்சியாக அறியப்படும் லோக் ஜன சக்தி கட்சியின் தலைவர் சிராக் பாஸ்வான் மத்திய அமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்டார். 

மத்திய இணையமைச்சராக மீண்டும் எல்.முருகன் பதவியேற்றார். பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவையில் ஜெய்சங்கர், சிவராஜ் சிங், மனோகர் லால் கட்டார், குமாரசாமி, பியூஸ் கோயல்
அஸ்வினி வைஷ்ணவ் உள்ளிட்டவர்களும் அமைச்சர்களாக பொறுப்பேற்றுக்கொண்டனர். 

மேலும், பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவையில் பாஜக தேசிய தலைவராக இருந்த ஜே.பி.நட்டா மத்திய அமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்டனர். 

இந்நிலையில், யாரும் எதிர்பாராத விதமாக கேரளாவை சேர்ந்த பாஜக எம்பி நடிகர் சுரேஷ் கோபியும் இணை அமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்டார். 

மத்திய அமைச்சரவையில் நாட்டின் 24 மாநிலங்களை சேர்ந்த பிரதமர் உள்பட மொத்தம் 72 இடம் பெற்று உள்ளனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Actor BJP MP Suresh Gopi Central Joint Minister


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->