போதைப்பொருள் உற்பத்தி - குஜராத்தில் 5 பேர் கைது.!
five peoples arrested for drugs in gujarat
குஜராத்தில் போதைப்பொருள் உற்பத்தி செய்யப்பட்டதாக ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத் மாநிலத்தில் உள்ள ஆனந்த் மாவட்டத்தின் காம்பாட் பகுதியில் போதைப்பொருள் உற்பத்தி பிரிவில் குஜராத் பயங்கரவாத தடுப்புப்பிரிவு அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
இந்த சோதனையின் போது கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 5 பேரை குஜராத் பயங்கரவாத தடுப்புப்பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் கடந்த ஆண்டு நவம்பரில், கடலோர காவல்படை கப்பல்களின் நடமாட்டம் குறித்த விவரங்களை பாகிஸ்தான் முகவருடன் பகிர்ந்து கொண்டதாக கூறப்படும் நபர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
English Summary
five peoples arrested for drugs in gujarat