லஞ்சம் வாங்கினால் இனி இதுதான் நடக்கும் - தவெக நிர்வாகிகளுக்கு எச்சரிக்கை விடுத்த விஜய்.!
tvk leader vijay action against tvk fans for bribe
இன்று சென்னை பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சி அலுவலகத்தில் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் மாவட்ட செயலாளர்கள் மற்றும் மாவட்ட கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், தலைவர் விஜய் தலைமையில் நடைபெற்று வருகிறது .
இந்த கூட்டத்தில் த.வெ.க. கட்சிக்கு மாவட்ட அளவிலான செயலாளர்கள் மற்றும் மாவட்ட நிர்வாகிகளை தேர்வு செய்ய கட்சியின் தலைவர் விஜய் தலைமையில் நேர்காணல் நடைபெற்று வருகிறது .
இந்த நிலையில் ஆலோசனைக் கூட்டத்தில் தலைவர் விஜய் பேசுகையில், தவெக மாவட்ட செயலாளர்கள் லஞ்சம் வாங்கக் கூடாது. லஞ்சம் வாங்குவதாக புகார் வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார் .
சமீபத்தில் தவெக கட்சியில் பதவி வகிக்க வேண்டுமானால் பணம் தர வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டதாக தகவல்கள் பரவியது. இந்த தகவல் சமூக ஊடகங்களில் பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது .
English Summary
tvk leader vijay action against tvk fans for bribe