தமிழக வெற்றி கழகமா? வெற்றி(க்) கழகமா? - இன்று வெளியாகும் அதிகார பூர்வ அறிவிப்பு.!
actor vijay announce potical name today
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் ‘தமிழக வெற்றி கழகம்’ என்ற புதிய கட்சியை தொடங்கினார். இந்தக் கட்சியின் தலைவராக நடிகர் விஜய் அறிவிக்கப்பட்டதுடன், தேர்தலில் நேரடியாக களமிறங்குவது தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை மூன்று பக்க அறிக்கையாகவும் வெளியிட்டார்.
இந்த நிலையில், விஜயின் கட்சியின் பெயர் "தமிழக வெற்றி கழகமா" அல்லது "தமிழக வெற்றிக் கழகமா" என்ற கேள்வி எல்லோருக்கும் ஒரு குழப்பமாக இருந்தது. இதற்கு பல்வேறு விமர்சனங்களும் வந்தன. இதனை ஏற்றுக் கொண்டு அதற்கு தீர்வு காணும் வகையில், அக்கட்சியின் தலைவர் விஜய், கட்சியின் பெயரில் ‘க்’ என்ற எழுத்தை பயன்படுத்த வேண்டும் என்று தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையடுத்து நேற்று முதல் அக்கட்சியின் பேனர்களில் ‘க்’ சேர்க்கப்பட்டு ‘தமிழக வெற்றிக் கழகம்’ என்றே பயன்படுத்தப்பட்டு வருகிறது. ரசிகர்களும், நிர்வாகிகளும் ‘தமிழக வெற்றிக் கழகம்’ என்ற பெயரை ட்ரெண்ட் செய்து வருகின்றனர். இந்த நிலையில், இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary
actor vijay announce potical name today