அதிரடி ட்விஸ்ட்.. ஈ.பி.எஸ்-க்கு "நடிகர் விஜய்" பிறந்த நாள் வாழ்த்து.!! பரபரக்கும் தமிழக அரசியல் - Seithipunal
Seithipunal


அதிமுக பொதுச் செயலாளரும் தமிழ்நாடு சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி இன்று தனது எழுபதாவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவரது பிறந்த நாளை முன்னிட்டு சேலத்தில் உள்ள அவரது இல்லத்தில் 70 கிலோ கேக் வெட்டி தொண்டர்களுக்கு வழங்கினார். 

அதிமுக பொதுச் சயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் பிறந்த நாளுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். சமீபத்தில் பாஜக கூட்டணியிலிருந்து அதிமுக வெளியேறிய நிலையில் அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் மூத்த தலைவர் எச் ராஜா உள்ளிட்டோரம் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்துள்ளனர். 

இந்த நிலையில் சமீபத்தில் அரசியல் கட்சியை ஆரம்பித்துள்ள நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வாழ்த்து செய்தி பகிரப்பட்டுள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தின் சமூக வலைதள பக்கத்தில் "அஇஅதிமுக பொதுச் செயலாளரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான திரு. எடப்பாடி கே.பழனிசாமி அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.

விஜய்,

தலைவர்,

தமிழக வெற்றிக் கழகம்" என வாழ்த்து பகிரப்பட்டுள்ளது. கடந்த நாடாளுமன்ற பொது தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை என விஜய் அறிவித்திருந்த நிலையில் தற்போது அதிமுக பொதுச் சயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு நடிகர் விஜய் வாழ்த்து தெரிவித்திருப்பது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Actor Vijay TVK birthday wishes to AIADMK gs EPS


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->