உள்ளாட்சி தேர்தல் : மொத்தமும் அதிமுக தான் போட்டியிடும்.! பாஜகவை கழட்டிவிட்டதா அதிமுக?!  - Seithipunal
Seithipunal


வருகின்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பாஜக உடன் கூட்டணி இல்லை என்று, அதிமுக அமைப்புச் செயலாளர் ஏ கே சீனிவாசன் பேசியிருப்பது பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை பேரூராட்சி தேர்தலில், பதினெட்டு வார்டுகளிலும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் இரட்டை இலை சின்னத்தில் தனித்தே போட்டியிடும் என்று அக்கட்சியின் அமைப்பு செயலாளர் ஏ கே சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

நேற்று திசையன்விளை பேரூராட்சி தேர்தல் குறித்து அதிமுக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் தேர்தலை எதிர்கொள்வது குறித்தும், பிரச்சார யுக்திகள் குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அதிமுக அமைப்புச் செயலாளர் ஏ கே சீனிவாசன்,

"வரும் உள்ளாட்சித் தேர்தலில் திசையன்விளையில் உள்ள 18 வார்டுகளிலும் அதிமுக இரட்டை இலை சின்னத்தில் தனித்துப் போட்டியிடும்" என்ற ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

ஏற்கனவே அதிமுக - பாஜக கூட்டணி உள்ளாட்சித் தேர்தலிலும் தொடரும் என்று அண்ணாமலை உள்ளிட்டவர்கள் தெரிவித்திருந்த நிலையில், தற்போது அதிமுக அமைப்பு செயலாளர் பேச்சு பெரும் பரபரப்பையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

admk a k srinivasan speech


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->