மழை வெள்ளத்தால் பெரிய பாதிப்பில்லை! கனவுலகத்தில் வாழும் முதல்வர் ஸ்டாலின் - வீடியோ வெளியிட்ட அதிமுக! - Seithipunal
Seithipunal


பாஜக மாநில துணை தலைவர் நாராயணன் திருப்பதி விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "விழுப்புரம் மாவட்டம் மயிலத்தில் நியாய விலைக்கடையில் மழை வெள்ள நிவாரணம் ரூபாய் 2000 பெற அதிக அளவில் மக்கள் குவிந்ததால் நெரிசலில் மயக்கமடைந்த மூன்று பெண்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியளிக்கிறது. 

இந்த நிவாரண பணத்தை மக்களின் வங்கிக்கணக்கில் நேரடியாக செலுத்துமாறு பல முறை வற்புறுத்தியும் அதை செய்ய மாறுகிறது தமிழக அரசு. 

லஞ்ச, ஊழலுக்கு இந்த செயல் வழிவகுப்பதோடு சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிற்கும் இது வழி வகுக்கிறது. மேலும், ஆளும் கட்சியின் அரசியல் முறைகேடுகள் பலவற்றிற்கும் இது பயன்படுத்தப்படுகிறது" என்று தெரிவித்துள்ளார்.

இதேபோல், தமிழகத்தில் மழை வெள்ளத்தால் பெரிய அளவில் பாதிப்பில் இல்லை என்ற கனவுலகத்தில் முதல்வர் ஸ்டாலின் வாழ்ந்து கொண்டிருப்பதாக, அதிமுக ஐடி விங்க் ஒரு காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன் விவரம் பின்வருமாறு:
  
தமிழகம் முழுவதும் பெரும்பாலான மாவட்டங்களில் மழை வெள்ளத்தில் மக்கள் தத்தளித்துக் கொண்டிருக்க; "பூனை கண்ணை மூடிக்கொண்டால் பூலோகமே இருண்டு விட்டதாக நினைத்துக்கொள்ளும்" என்பது போல் தமிழகத்தில் மழை வெள்ளத்தால் பெரிய அளவில் பாதிப்பில் இல்லை என்று  கூறும் அளவிற்கு கனவுலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் பொம்மை முதல்வர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ADMK and BJP Condemn to DMK Govt Flood issue MK Stalin


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->