இன்று சேப்பாக்கத்தில் 02-வது டி20 போட்டி; அபிஷேக் சர்மா விளையாடுவதில் சிக்கல்..!
Abhishek Sharma has a problem playing
இங்கிலாந்து கிரிக்கெட் அணி, இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 05 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது.
இதில் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் இந்தியா வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான 02-வது டி20 போட்டி சென்னையில் இன்று நடைபெற உள்ளது.
இதற்காக இரு அணி வீரர்களும் நேற்று தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர்.
குறித்த பயிற்சியின் போது இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மாவுக்கு கணுக்காலில் காயம் ஏற்பட்டுள்ளது. அவர் களத்தில் வலியால் துடித்த போது முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இதனால் அபிஷேக் சர்மா 02-வது போட்டியில் விளையாடுவதில் சிக்கல் எழுந்துள்ளது. இவர் முதல் போட்டியில் 20 பந்துகளில் அரை சதமடித்து இந்திய அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
Abhishek Sharma has a problem playing