பாஜகவுடன் கூட்டணி இல்லை - அதிமுக திட்டவட்டமாக அறிவிப்பு!
ADMK BJP Alliance issue Jayakumar EPS DMK
நேற்று திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிச்சாமி இடம் செய்தியாளர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பினர்.
அதில், வரும் 2026 சட்டமன்ற பொது தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைக்க வாய்ப்பு உள்ளதா? என்ற கேள்விக் பதிலளித்த எடப்பாடி பழனிச்சாமி, "ஒத்த கருத்துடைய கட்சியுடன் அதிமுக கூட்டணி அமைக்க தயாராக உள்ளது. அதிமுகவின் தலைமையை ஏற்றுக் கொள்ளும் ஒத்த கருத்துடைய கட்சியுடன் கூட்டணி அமைக்க தயாராக இருக்கிறோம்" என்று தெரிவித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து செய்தி ஊடகங்கள் அதிமுக பாஜகவுடன் கூட்டணி வைக்கப்போவதாக வதந்தியை பரப்ப ஆரம்பித்தன.
இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவிக்கையில், பாஜகவுடன் எந்த காலத்திலும் கூட்டணி இல்லை. பாஜகவுடன் எங்களுக்கு ஓட்டும் இல்லை, உறவும் இல்லை.
எடப்பாடி பழனிச்சாமி சொன்ன பதிலை ஊடகங்கள் திரித்து செய்தி வெளியிட்டு வருகின்றன. உண்மையில் பாஜகவுடன் திமுகதான் கூட்டணியில் உள்ளது. ஒரு மாநில அமைச்சராக இருந்த உதயநிதி பிரதமரை சந்தித்த போதே அது உறுதியானது" என்று தெரிவித்தார்.
English Summary
ADMK BJP Alliance issue Jayakumar EPS DMK