ஓபிஎஸ்-க்கு வேலை முடிஞ்சுடுச்சு | தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்கள் என்ன? பரபரப்பு பேட்டி!  - Seithipunal
Seithipunal



அதிமுக பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவு கடிதத்தை தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்த பின்னர், அக்கட்சியின் எம்.பி., சி.வி சண்முகம் செய்தியாளர்களை சந்தித்து தெரிவித்தாவது, "2532 ஆதரவு பிரமாண பத்திரமும் தாக்கல் செய்தோம். அதிமுக பொதுக்குழுவை செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்ததன் அடிப்படையில், அந்த உத்தரவு நகலையும் சமர்பித்துள்ளோம். பொதுக்குழுவில் இயற்றப்பட்ட தீர்மானத்துக்கு ஒப்புதல் அளித்து அதனை இணையத்தில் வெளியிட வேண்டும் என்று மனு அளித்து இருக்கிறோம்.

ஓ பன்னீர்செல்வம் நான்தான் உண்மையான அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என்று பேசி வருகிறார். ஆனால், பொதுக்குழு என் பின்னால் தான் இருக்கிறது. எனக்கு இத்தனை பொதுக்குழு உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்து இருக்கிறார்கள் என்று, எந்த நிலையிலும், எந்த இடத்திலும் ஓ பன்னீர்செல்வம் சொல்லவும் இல்லை. இது குறித்து தேர்தல் ஆணையத்திடம் கடிதமும் தரவில்லை.

ஓபிஎஸ் பின்னால் தான் அதிமுக இருக்கிறது என்பதற்கான எந்த ஆதாரத்தையும் அவர் சமர்ப்பிக்கவில்லை. ஓபிஎஸ் கிளிப்பிள்ளை சொல்வது போல், நான் தான் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் என்று சொன்னதையே சொல்லிக் கொண்டிருக்கிறார்.

இந்த ஒருங்கிணைப்பாளர் பதவி என்பது ரத்தாகிவிட்டது. கடந்த ஜூலை மாதம் பதினொன்றாம் தேதி நடைபெற்ற அதிமுகவின் பொதுக்குழு கூட்டத்திலேயே இதனை முடிவு செய்து, ரத்து செய்தாகிவிட்டது. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பதவிகள் ரத்து செய்யப்பட்டு, பொதுச்செயலாளர் பதவி உருவாக்கப்பட்டு, தற்போது இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

2532 பொதுக்குழு உறுப்பினர்கள் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்திருக்கிறார்கள். 65 சட்டமன்ற உறுப்பினர்களில் 61 சட்டமன்ற உறுப்பினர்கள் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்திருக்கிறார்கள். ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்களில் மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்து இருக்கிறார்கள்.

ஓ பன்னீர்செல்வத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ள இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களில், ஒருவர் அவரின் மகன். இன்னொருவர் வேறு எங்கும் அவர் செல்ல முடியாது" என்று சி வி சண்முகம் தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ADMK CV Shanmugam say about EC and OPS EPS


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->