2026 தேர்தல்: திமுக மற்றும் அதிமுகவின் கூட்டணி குறித்த அடுத்தடுத்த அறிவிப்புகள்!  - Seithipunal
Seithipunal


2026 சட்டமன்ற பொது தேர்தலில் அதிமுகவுடன் தேமுதிக கூட்டணி தொடரும் என்று, தேமுதிக தேமுதிகவின் துணைப் பொதுச்செயலாளர் எல்.கே சுதீஷ் தெரிவித்துள்ளார். 

இன்று புதுக்கோட்டையில் தேமுதிகவின் முப்பெரும் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட எல்கே சுதீஷ் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து தெரிவித்ததாவது, "தேமுதிக தொடங்கி 20 ஆண்டுகள் எட்டியுள்ளதை முன்னிட்டு கட்சியின் முப்பெரும் விழாவாக இது கொண்டாடப்பட்டு வருகிறது. 

இதுவரை நான்கு சட்டமன்றத் தேர்தல், நான்கு மக்களவை பொதுத் தேர்தல், 3 உள்ளாட்சி தேர்தலை சந்தித்து தேமுதிக வலுவான ஒரு கட்சியாக தமிழகத்தில் இருந்து வருகிறது. வருகின்ற 2026 சட்டமன்ற பொது தேர்தலிலும் அதிமுகவுடன் தேமுதிக கூட்டணி தொடரும். 

திருமாளவன் நடத்தக்கூடிய மது ஒழிப்பு மாநாட்டிற்கு அழைப்பு விடுக்கப்பட்டால், அது குறித்து ஆலோசனை செய்வோம். சிறார்கள் மீதான வன்கொடுமை சம்பவங்கள் தமிழகத்தில் அதிகரித்து வருவது வேதனை அளிக்கிறது. தமிழகத்தின் சிறு கிராமங்களில் கூட கஞ்சா விற்பனை சகஜமாகி உள்ளது. பெண்களுக்கும் பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை உள்ளது. மேற்குவங்க மாநிலத்தில் சட்டம் இயற்றியது போல் தமிழகத்திலும் கடுமையான சட்டங்களை இயற்ற வேண்டும்" என்று தெரிவித்தார்.

முன்னதாக மது ஒழிப்பு மாநாடு காரணமாக திமுக - விசிக கூட்டணி அடையாளம் என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வந்த நிலையில், திமுகவுடன் என்றும் கூட்டணி தொடரும் என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ADMK DMDK and DMK VCK Alliance Issue


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->