அதிமுக-தேமுதிக கூட்டணி உடைகிறது! நாங்க எப்போது சொன்னோம்? எடப்பாடி பழனிசாமி பகீர் பேட்டி!
ADMK DMDK EPS MP Seat
அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு மாநிலங்களவை சீட் வழங்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டதாக தேமுதிக நிர்வாகி பிரேமலதா விஜயகாந்த் கடந்த சில நாட்களாக கூறி வந்தார்.
மேலும், தேமுதிக சார்பாக விஜய பிரபாகரன் மாநிலங்களவை எம்பி ஆக உள்ளதாகவும் சொல்லப்பட்டது.
இந்த நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி இதற்க்கு மறுப்பு தெரிவித்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இன்று செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிச்சாமி தெரிவிக்கையில், "நாங்கள் எப்போது தேமுதிகவுக்கு மாநிலங்களவை சீட் கொடுப்பதாக கூறினோம்? இது தொடர்பாக எந்த ஒரு உறுதியும் வழங்கப்படவில்லை" என்று தெரிவித்தார்.
மேலும், அதிமுக கூட்டணியில் தேமுதிக முக்கிய அங்கமாக இருந்தாலும், மாநிலங்களவை இடம் வழங்குவது பற்றி எந்த அதிகாரப்பூர்வ முடிவும் எடுக்கப்படவில்லை என்று பழனிசாமி தெரிவித்தார். இது போன்ற முடிவுகள் கட்சி உயர்மட்டக் குழு ஆலோசனைக்குப் பிறகே மேற்கொள்ளப்படும் என்றும் விளக்கம் அளித்தார்.
தற்போது இது சர்ச்சையாகியுள்ள நிலையில், அதிமுக-தேமுதிக கூட்டணியில் இது சிக்கலை ஏற்படுத்தும் என்றும், இதனால் கூட்டணி கூட அடையாளம் என்றும் சொல்லப்படுகிறது.