பாஜக முன்னாள் புள்ளிகளுக்கு அதிமுகவில் புதிய பதவி - எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்ட அறிவிப்பு! - Seithipunal
Seithipunal


பாஜகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்த நடிகை கௌதமி மற்றும் தடா து.பெரியசாமி இருவருக்கும் புதிய பதவிகளை வழங்கி, அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதன்படி,

அதிமுகவின் கொள்கை பரப்புத் துணைச் செயலாளராக நடிகை கௌதமி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளராக தடா பெரியசாமி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

மேலும், அதிமுகவின் சிறுபான்மையினர் நல துணைச் செயலாளராக பாத்திமா அலி நியமனம் செய்யப்பட்டுள்ளார். 

கள்ளக்குறிச்சி மாவட்ட விவசாய பிரிவு செயலாளர் பொறுப்பில் இருந்து சன்னியாசி விடுவிக்கப்பட்டு, அதிமுகவின் விவசாய பிரிவு அணி துணைச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ADMK EPS Announce


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->