வெளியான தீர்ப்பு : ஓபிஎஸ் தரப்பின் அடுத்தகட்ட முடிவு என்ன? பரபரப்பு பேட்டி.! - Seithipunal
Seithipunal


கடந்த ஜூலை மாதம் 11-ந்தேதி நடைபெற்ற அதிமுக சிறப்பு பொதுக்குழு கூட்டத்தை செல்லாது என்று அறிவிக்கக்கோரி, ஓ.பன்னீர்செல்வம், வைரமுத்து ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். 

இந்த வழக்கில், பொதுக்குழு செல்லாது என்றும், ஜூன் 23-ந்தேதிக்கு முன்பு இருந்த நிலையே தொடரவேண்டும் என்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

இந்த தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட மேல்முறையீடு வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 

அதன்படி, தனி நீதிபதியின் தீர்ப்பு ரத்து செய்யப்படுகிறது. இதன்மூலம் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டது அங்கீகரிக்கப்பட்டுள்ளது. மேலும், ஓபிஎஸ் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதும் உறுதியாகியுள்ளது.

இந்நிலையில், அதிமுக பொதுக்குழு வழக்கின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படும் என்று, ஓபிஎஸ் ஆதரவாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார். ஓபிஎஸ் உடன் ஆலோசனை நடத்திய பிறகு மேல்முறையீடு குறித்து முடிவு எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

admk eps case judgment ops next move


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->