சோகத்தில் அதிமுகவினர்! இபிஎஸ்-யை வேதனையில் ஆழ்த்திய மரண செய்தி!
ADMK EPS Condolence Gokula indra Husband death
அதிமுக முன்னாள் அமைச்சர் கோகுல இந்திராவின் கணவர் மறைவுக்கு, அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்த அவரின் செய்திக்குறிப்பில், "அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அமைப்புச் செயலாளரும், கழக செய்தித் தொடர்பாளரும், முன்னாள் அமைச்சருமான S. கோகுல இந்திரா அவர்களுடைய கணவர் A.R. சந்திரசேகர் அவர்கள் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி மரணமடைந்துவிட்டார் என்ற செய்தி கேட்டு வருத்தமுற்றேன்.
பாசமிகு கணவரை இழந்து மிகுந்த வேதனையில் வாடும் அன்புச் சகோதரி கோகுல இந்திரா அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், இந்தத் துயரத்தைத் தாங்கிக்கொள்ளக்கூடிய சக்தியையும், தைரியத்தையும் அளிக்க வேண்டும் என்றும், சந்திரசேகர் அவர்களுடைய ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாறவும் எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
English Summary
ADMK EPS Condolence Gokula indra Husband death