எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு தடை! சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி!
ADMK EPS KC Palanisamy case
கடந்த சில மாதங்களுக்கு முன் அதிமுக ஒருங்கிணைப்புக் குழு குறித்து முன்னாள் எம்பி கே.சி. பழனிசாமியை குறிவைத்து சில கருத்துக்களை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்திருந்தார்.
அதில் குறிப்பாக “சாலையில் நடக்கிறவர்கள் கூட குழு அமைக்கிறார்கள்; கே.சி. பழனிசாமி கட்சியிலேயே இல்லை; ஓ.பன்னீர்செல்வத்துடன் சேர்ந்து விட்டார்” என தெரிவித்திருந்தார்.
இந்த கருத்துக்கள் அவதூறாக உள்ளதாகக் கோவை நீதிமன்றத்தில் கே.சி. பழனிசாமி, வழக்குத் தாக்கல் செய்தார். இந்த வழக்கு, கோவை முதலாவது நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது.
மேலும், வழக்கில் இபிஎஸ் கடந்த 15ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என அவருக்கு அழைப்பாணை அனுப்ப நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில், கே.சி. பழனிசாமியின் வழக்கை ரத்து செய்யக்கோரியும், இபிஎஸ் நேரில் ஆஜராக வேண்டாமென விலக்கு கோரியும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், கோவை நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகுவதிலிருந்து விலக்கையும், வழக்கின் விசாரணையில் இடைக்காலத் தடையும் விதித்து உத்தரவிட்டுள்ளது.
English Summary
ADMK EPS KC Palanisamy case