டெபாசிட் போச்சு... வேற வழியே இல்லை, இதன் முடிவு! அதிமுகவை எச்சரிக்கும் ஓபிஎஸ்!  - Seithipunal
Seithipunal


சென்னை எழும்பூரில் இன்று முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் செய்தியாளர்களை சந்தித்து தெரிவித்தாவது, "தொண்டர்கள் ஒருங்கிணைந்தால் தான் வெற்றி பெற முடியும். ஒருங்கிணையாமல் போனால் வெற்றி பெற முடியாது.

கடந்த மக்களவை பொதுத் தேர்தலில் இரட்டை இலை சின்னத்தை கேட்டு பெற்று, ஏழு இடங்களில் டெபாசிட் போய் உள்ளது. மேலும் 13 இடங்களில் மூன்றாவது இடத்தை பெற்று இருக்கிறார்கள். 

இதேபோல மற்ற மக்களவைத் தொகுதிகளிலும் பெரும் பின்னடைவை சந்தித்திருக்கிறது. தொண்டர்கள் பிரிந்து இருப்பதால்தான் கடந்த மக்களவைத் தேர்தலில் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியவில்லை. இதுதான் முக்கிய காரணம்.

எனவே, புரட்சித்தலைவர் எம்ஜிஆர், புரட்சித்தலைவி ஜெயலலிதா கட்டிக் காப்பாற்றிய இந்த அதிமுக இயக்கத்தை, தொண்டர்கள் ஒன்று சேர்ந்து மீண்டும் வலுவாக உயர்த்திப் பிடிக்க வேண்டும்.

கடந்த மக்களவைத் தேர்தலில் நான் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்டபோது, என்னை எதிர்த்து 6 பன்னீர்செல்வம் போட்டியிட்டார்கள். 

சுயேட்சையாக ராமநாதபுரம் தொகுதியில்  போட்டியிட்ட நான் 33 சதவீத வாக்குகளை பெற்றுள்ளேன். தொண்டர்களும் பொதுமக்களும் எங்கள் பக்கம்தான் இருக்கிறார்கள் என்பதையே இது உணர்த்துகிறது. 

இரட்டை இலை சின்னத்தை டெபாசிட் இழக்க செய்து தமிழக அரசியல் அருவருக்கத்தக்க அரசியலை தற்போது நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அதிமுக தொண்டர்கள் ஒன்றிணைக்க வேண்டும்" என்று ஓ பன்னீர்செல்வம் தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ADMK EPS OPS Election result


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->