2026 சம்பவம் உறுதி! சீமானை மறைமுகமாக சாடிய எடப்பாடி பழனிச்சாமி!
ADMK EPS say about TVK Vijay NTK Seeman DMK MK Stalin
சேலம் எடப்பாடியில் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொணட அக்கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமி, பின்னர் செய்தியாளர்களை சந்தித்து அவர் தெரிவித்தாவது, "அதிமுக மக்களுக்காக தொடங்கி, அவர்களுக்காகவே உழைக்கும் கட்சி.
அதிமுக ஆட்சியில் இருந்தபோது தமிழக மக்களுக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வந்தோம். இதனால் தான் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் அதிமுகவை விமர்சிக்கவில்லை?
அதிமுகவை விஜய் விமர்சிக்கவில்லை என்பதுதான் தற்போது பலரின் ஆதங்கமாக உள்ளது. தமிழகத்தில் அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன், திமுக ஆட்சியில் நடந்த ஊழல்கள் அனைத்தும் விசாரிக்கப்படும்,
திமுக கூட்டணி பலமாக இல்லை. இந்த மூன்று ஆண்டுகளாக எந்த போராட்டத்தையும் நடாத்தாத திமுக கூட்டணி கட்சிகள், இப்போது ஒவ்வொரு போராட்டமாக அறிவித்து வருகின்றன.
திமுகவின் கூட்டணி குறித்து காங்கிரஸ் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தங்களின் கருத்துகளை பேச தொடங்கியுள்ளது. இவ்வளவு பிரச்சனைகள் இருக்கும்போது, திமுக கூட்டணி பலமாக இருப்பதாக கூற முடியாது.
அதிமுகவில் பிளவுகள் இல்லை. கட்சிக்கு விரோதமாக செயல்பட்டவர்கள் பொதுக்குழு தீர்மானத்தின் மூலம் நீக்கப்பட்டவர்களுக்கு இனிமேல் இடமில்லை" என்று தெரிவித்தார்.
English Summary
ADMK EPS say about TVK Vijay NTK Seeman DMK MK Stalin