அதிமுக முன்னாள் அமைச்சருக்கு ஐந்தாண்டுகள் சிறைத் தண்டனை - சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு! - Seithipunal
Seithipunal


ஊழல் வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் இந்திரா குமாரி, அவரது கணவருக்கு சிறப்பு நீதிமன்றம் விதித்த 5 ஆண்டுகள் சிறை தண்டனை உறுதிசெய்து உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

 

வழக்கும், பின்னணியும்:

1991-96 ஜெயலலிதா அமைச்சரவையில் சமூக நலத்துறை அமைச்சராக இருந்த இந்திரா குமாரி, மாற்றுத் திறனாளிகள் பள்ளிக்கு ஒதுக்கப்பட்ட நிதியை முறைகேடு செய்ததாக அவரது கணவர் உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது

இந்த வழக்கில் இந்திராகுமாரி, கணவர் பாபுவுக்கு தலா 5 ஆண்டுகள் தண்டனையை சிறப்பு நீதிமன்றம் கடந்த 2021ம் ஆண்டு வழங்கியது. 

இதனை எதிர்த்து அவர் மேல்முறையீடு செய்திருந்த நிலையில், சிறப்பு நீதிமன்றம் வழங்கிய ஐந்து ஆண்டு சிறை தண்டனையை உறுதி செய்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் இந்திராகுமாரி உடல்நலக்குறைவால் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ADMK eX minister Indra Kumari High court judgement


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->