"அதிமுக ஆட்சிக்கு வந்தால்..." அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி..!! - Seithipunal
Seithipunal


அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களிடம் பேசிய போது, "அதிமுக ஆட்சியில் கள்ளச் சாராயம் என்பதே இல்லை. திமுக ஆட்சியில் தான் முதன் முதலில் கள்ளச் சாராயம் புழக்கத்திற்கு வந்தது. 

அதிலும் குறிப்பாக செந்தில் பாலாஜி தான் கள்ளச் சாராய விற்பனைக்கு மூல காரணம். கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய விவகாரத்தில் திமுக கூட்டணி கட்சிகள் இருக்கும் இடமே தெரியாமல் அமைதியாக உள்ளனர். மணிப்பூர் கலவரத்தின் போது பிரதமர் மோடி ஏன் மணிப்பூருக்கு நேரில் செல்லவில்லை என்று ராகுல் காந்தி கேட்டார். அவர் ஏன் இப்போது கள்ளக்குறிச்சிக்கு முதல்வர் ஸ்டாலின் ஏன் போகவில்லை என்று கேட்கவில்லை?

சட்டசபையில் அதிமுகவினர் இருந்தால் கள்ளச் சாராய விவகாரம் குறித்து கேள்வி எழுப்புவோம் என்று அறிந்ததால் தான் அதிமுகவை அவையை விட்டு வெளியேற்றி வெறும் கையால் முதல்வர் கம்பு சுற்றிக் கொண்டுள்ளார். அதிமுகவிற்கு கள்ளக்குறிச்சி சம்பவம் குறித்து சட்டசபையில் விவாதிக்க அனுமதி தரவில்லை. 

இந்த விவகாரம் குறித்து அவை விதி எண் 56ன் படி எதிர்க் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு பேச அனுமதி தரவில்லை. ஆனால் முதல்வர் மட்டும் இதே விதி 56ன் கீழ் இந்த விவகாரம் குறித்து பேசுகிறார். இது எப்படி சாத்தியம்? ஆளுக்கு ஒரு சட்டமா?

சட்டசபையின் கண்ணியம் காக்கும் விதமாக நாங்கள் அமைதியாக வெளியேறினோம். சட்டையைக் கிழித்துக் கொண்டு வெளியேறவில்லை. அதிமுக ஆட்சிக்கு வந்தால், மதுபானக் கொள்முதல் ஊழலில் முதல்வர் ஸ்டாலின் உட்பட தொடர்புடைய அனைவரின் மீதும் சட்ட நடவடிக்கை எடுப்போம்" என்று பேசியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ADMK EX Minister Sellur Raju Gives Interview


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->