அதிமுக முன்னாள் அமைச்சர் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி.! - Seithipunal
Seithipunal


அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணிக்கு கொரோனா உறுதியாகி அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் கடந்த சில வரமாக கொரோனா தொற்று அதிகரித்து வந்ததால், பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவித்து வந்நதது. 

தற்போது கொரோனா தொற்று பரவல் குறைந்துவருவதை அடுத்து தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் மீண்டும் தளர்த்தப்பட்டு வருகிறது.

அதே சமயத்தில் அரசியல்கட்சி தலைவர்கள், திரைபிரபலங்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகும் செய்திகள் தொடர்ந்து வந்து கொண்டு இருக்கின்றன.

இந்நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணிக்கு கொரோனா நோய்த்தொற்று இன்று உறுதியாகியுள்ளது.

இதனையடுத்து அவர் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

முன்னதாக இன்று காலை, மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, அவர் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

admk ex minister thangamani affected corona


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->